முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / மீண்டும் வருகிறது வாக்மேன்.. 90ஸ் கிட்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனி!

மீண்டும் வருகிறது வாக்மேன்.. 90ஸ் கிட்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனி!

சோனி வாக்மேன்

சோனி வாக்மேன்

Sony Walkman ஆனது எட்ஜ்-AI, DSEE அல்டிமேட் (டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

என்னதான் எம்பி 3 பிளேயர், அலெக்சா, விங்க், ஜ்யோசாவன் என்று வந்தாலும் 90ஸ் கிட்டுகளுக்கு அந்த காலத்தில் இருந்த  வாக்மேன் சாதனம் இஷ்டப்பட்ட பிளேயர். டேப் கேசட்டை வாக்மேனில் போட்டு, வயர்டு ஹெட்போன்ஸை வாக்மேனில் சொருகி,  மாட்டிக்கொண்டு அங்கும்-இங்கும் நடந்து கொண்டே பாடல் கேட்டு லயித்திருக்கும் சுகமே தனி.

அதிலும் கேசட் சிக்கிக்கொண்டால் அதி பக்குவமாக எடுத்து சுண்டு விரல் விட்டு சுற்றி சரி செய்து கேசட்டை மாற்றி மாற்றி போடு 2 பக்கம் உள்ள பாடல்களையும் கேட்கும் சுகம் எல்லாம் இந்த காலத்து இளைஞர்களுக்கு தெரியாது. அந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தையை தேட வேண்டும். அந்த வாக்மேன் புது வடிவம் பெற்று மீண்டும் சந்தைக்கு திரும்ப வந்துள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சி தானே.  ஆடியோ டிவைஸ் என்றாலே அந்த காலத்தில் இருந்து இன்று வரை தலை சிறந்த நிறுவனமாகச் சோனி (Sony) நிறுவனம்  திகழ்ந்து வருகிறது. பல வளர்ச்சிகளை அடைந்தாலும் 90ஸ் கிட்டுகள் மிஸ் பண்ணும் அந்த வாக்மேனை புதிய வடிவத்தில் வெளியிட சோனி நிறுவனம் முடிவு செய்து புதிய'Sony NW-ZX707' Walkman சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

Sony Walkman NW-ZX707 ஆனது USB Type-C போர்ட் வழியாக 3.5 மணி நேரத்தில் சார்ஜ் ஏறும் திறனோடு,  64GB உள்ளக சேமிப்பு திறனோடு வருகிறது. மேலும் இது Android 12 இல் இயங்குகிறது மற்றும் Google Play Store இலிருந்து Deezer, Spotify மற்றும் பல பயன்பாடுகளைப் பதிவிறக்க பயனர்களை அனுமதிக்கிறது.

Sony India-வின் தகவல் படி, இது S-Master HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பத்துடன் வருகிறது. முந்தைய டேப் கேசட் வாக்மேன் போல இல்லாமல், இது ஹை-டெக் தொழில்நுட்பத்துடன், மிகவும் ஸ்லிம்மான டிசைனுடன், 5' இன்ச் தொடு திரை வசதியுடன் இருக்கிறது.

Sony Walkman ஆனது எட்ஜ்-AI, DSEE அல்டிமேட் (டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நிகழ்நேரத்தில் கம்ப்ரெஸ்ட்டு செய்யப்பட்ட டிஜிட்டல் மியூசிக் பைல்களை மேம்படுத்துகிறது. தற்போது உருவாகி வரும் அல்காரிதம் CD-தரம் (16-பிட் 44.1/48kHz) இழப்பற்ற கோடெக் ஆடியோவிற்கு ஏற்ப கூடுதல் சப்போர்ட் சிஸ்டத்தை இது  கொண்டுள்ளது.

வைஃபை இணக்கத்தன்மையோடு  இசையை ஸ்ட்ரீம் செய்யவும் மற்றும் பாடல்களை டவுன்லோட் செய்யவும் அனுமதிக்கிறது.  உயர்தர சவுண்ட் அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக  வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சோனியின் ஒரிஜினல் மியூசிக் பிளேயர் ஆப்ஸை பயன்படுத்தும் போது  இது 25 மணிநேர பேட்டரி தாங்கும் திறன் கொண்டுள்ளது

ஆனால் இதன் விலை தான் கொஞ்சம் அதிகம். கொஞ்சம் அல்ல நிறையவே அதிகம். இந்த தனித்துவமான Sony NW-ZX707 Walkman இந்தியாவில்  ரூ. 69,990 என்ற விலையில் விற்கப்படுகிறது. அம்சங்களை பார்க்கும் பொது வாங்க தோன்றும் எண்ணம் விலையை பார்த்ததும் பறந்து விடுகிறது.

First published:

Tags: Gadgets, Sony, Sony music