ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சோனி டிவி, வயர்லெஸ் ஹெட் போன்கள் வாங்க சரியான நேரம்... ஆஃபர் மேல் ஆஃபர்

சோனி டிவி, வயர்லெஸ் ஹெட் போன்கள் வாங்க சரியான நேரம்... ஆஃபர் மேல் ஆஃபர்

சோனி எலக்ட்ரானிக்ஸ்

சோனி எலக்ட்ரானிக்ஸ்

பல்வேறு பண்டிகைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருப்பதால் விற்பனையை சூடுபிடிக்க வைத்துள்ளது சோனி நிறுவனம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிவி, வயர்லெஸ் ஹெட் போன்கள் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு பண்டிகை கால சலுகை அடிப்படையில் விலையை குறைத்து அதிரடி காட்டி உள்ளது சோனி இந்தியா நிறுவனம்.எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் மீது அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு எப்போதும் சோனி என்ற பிராண்டின் மீது தனி விருப்பம் உண்டு.

ஏனெனில் அந்நிறுவனம் தயாரிக்கும் சாதனங்கள் அனைத்தும் அதிக தரத்துடனும் நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மையுடனும் இருக்கும். அதே சமயத்தில் அதனுடைய விலையும் அதற்கேற்றவாறு அதிகமாகவே இருக்கும். ஆனால் பல்வேறு பண்டிகைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருப்பதால் பண்டிகைக்கால சலுகையை முன்னிட்டு தங்களின் பலவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான விலையை குறைத்து விற்பனையை சூடுபிடிக்க வைத்துள்ளது சோனி நிறுவனம்.

அதன்படி சோனி இந்தியா நிறுவனத்தின் பல்வேறு எலெக்ட்ரானிக் சாதனங்கள் சலுகை விலையில் கிடைத்தாலும் அவற்றில் முக்கியமான மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்ப கூடியதும், குறைந்த விலையில் கிடைக்க கூடியதுமான சில எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பற்றி பார்ப்போம்.

Read More : OnePlus வழங்கும் ஆற்றல் வாய்ந்த 5G-ரெடி Nord சுற்றுச்சூழல் அமைப்பானது இப்போது சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைக்கின்றது.!

ஆடியோ டிவைஸ்களை பொருத்தவரையில் சோனி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய WH -1000MX5 மாடல் ஹெட் போன் ரூபாய் 26,990 க்கும், Linkbus WF-L900 மாடல் ஹெட்போன் ரூபாய் 12,990க்கும், WF-C500 இந்த மாடல் ஹெட் போன் 2,990 க்கும் சலுகை விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தன்னுடைய பழைய மாடல் ஹெட்போன்களான WX 1000XM4, WF -XB700 மற்றும் WG XB910N ஆகியவை முறையே ரூ.17,990க்கும் ரூ.₹5,1990க்கும் ரூ.8090க்கும் விற்கப்படுகிறது. இதில் மேலே குறிப்பிட்டுள்ள WH – 1000XM4 என்ற மாடல் ஹெட்போன் இன்றளவும் சிறந்த நாய்ஸ் கேன்சலிங் வசதிக்காக ஹெட்போன் பிரியர்களால் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. இந்த மாடலின் வெற்றியை மனதில் வைத்து தான் இதன் அப்கிரேட்டட் வெர்ஷன் ஆகிய WH-1000XM5 என்று புதிய மாடலை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வயர்லெஸ் ஸ்பீக்கர்களை பொறுத்தவரையில் SRS XG500 என்ற மாடல் 33௦௦௦ ரூபாய்க்கு தற்போது விற்கப்பட்டு வருகின்றது. பண்டிகைக்கால சலுகையில் கிட்டத்தட்ட 13௦௦௦ ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டு 20 ஆயிரம் ரூபாய்க்கு இந்த ஸ்பீக்கர் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெட்போன்களை தவிர்த்து சவுண்ட் பார்களுக்கும் ரூபாய் 54,990 அளவிலான விலை சலுகையை சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. பிரேவியா 108cm (43inch) அளவிலான அல்லது அதற்கு அதிக அளவுள்ள டிவியை வாங்குபவர்களுக்கு HT -A7000 மற்றும் HT -A9 என்று சவுண்ட் பார் ஸ்பீக்கர்கள் சலுகை விலையில் அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் HT -S40R சாம்பாருக்கு ரூபாய் 10000 வரை விலை சலுகையும் மற்றும் HT-S204 சவுண்ட் பாருக்கு ரூபாய் 8000 வரை விலை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

கேமரா பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக Alpha 7SIII மற்றும் Alpha 7c மாடல் கேமராக்களை வாங்குபவர்களுக்கு ரூபாய் ரூ.14,9990 மதிப்புள்ள நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன்கள் பரிசாக வழங்கப்படும். மேலும் Alpha7SIII மாடல் கேமராவை வாங்குபவர்களுக்கு கேமரா சுமந்து செல்லும் பையும் இலவசமாக அளிக்கப்படும்.

இதை தவிர்த்து புல் பிரேம் மற்றும் சினிமா லைவ் மாடல் லென்சுகளுக்கு ஆல்ஃபா கம்யூனிட்டியில் பதிவு செய்தால் உங்களுக்கு இரண்டு வருட வாரண்டிக்கு பதிலாக மூன்று வருட வாரண்டியும், குறிப்பிட்ட வகை லென்சுகளை வாங்குவோருக்கு ரூ.41௦௦௦ வரை விலை தள்ளுபடியும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சோனி பிரேவியா டிவி மாடல்களில் W6600 ரூ.42,990க்கும் W830K ரூ. 26,990 கும் W880K ரூ.58,990 க்கும் சலுகை விலையில் விற்கப்படும் என சோனி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றை சோனி நிறுவனத்தின் நேரடி ஷோரூம்களிலும் லோட்டஸ் எலக்ட்ரானிக் சூப்பர் மார்க்கெட், விஜய், மற்றும் இ-காமர்ஸ் வெப்சைட்டுகள் ஆன அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றிலும் பெற முடியும்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, Offer