Home /News /technology /

Netflix, YouTube உள்ளிட்ட கூடுதல் பொழுதுபோக்கு ஆப்ஸ்களை கொண்டு வரும் சோனி PS5...!

Netflix, YouTube உள்ளிட்ட கூடுதல் பொழுதுபோக்கு ஆப்ஸ்களை கொண்டு வரும் சோனி PS5...!

பிஎஸ் 5 மீடியா ரிமோட்

பிஎஸ் 5 மீடியா ரிமோட்

இந்தியாவில் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்றாலும், அமெரிக்காவில் உள்ள HBO Max சந்தாதாரர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

  • News18
  • Last Updated :
இன்றைய தொழில்நுட்பம் பல பயன்களை ஒரே இடத்தில் தங்களது பயனர்கள் பெற்றுக்கொள்ளும் வசதியை கண்டறிந்து வருகின்றன. பயனர்கள் எண்ணிக்கையை தக்க வைத்து கொள்ளவும், புதிதாக மக்களை கவரவும் பல நிறுவனங்கள் பல்வேறு வகையிலான ஏற்பாடுகளை தங்களது தயாரிப்புகளில் செய்து வருகின்றது. அந்த வகையில் சோனி நிறுவனம் தற்போது தங்களின் தயாரிப்பில் கொண்டுவந்துள்ள அம்சங்களை இப்போது காண்போம்.

சோனி தனது வரவிருக்கும் பிளேஸ்டேஷன் 5 கன்சோலில் Netflix, Disney Plus, Amazon Prime Video, Spotify, Twitch, YouTube, மற்றும் பல பொழுதுபோக்கு ஆப்ஸ்களுடன் வரவுள்ளது என்று அறிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் பிளேஸ்டேஷன் 5ஐ பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. ஆப்ஸ்களுடன், சோனி தனது புதிய மீடியா ரிமோட் கண்ட்ரோல் பற்றிய விவரங்களையும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே வழங்குகிறது.

சோனி வியாழக்கிழமை அன்று இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பயனர்கள் தங்கள் பொழுதுபோக்கு ஆப்ஸ்களை எளிதில் அணுகுவதற்காக கேம் ஹோம் ஸ்கிரீனுக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள மீடியா பொழுதுபோக்குக்காக பிரத்யேகமாக ஒரு இடம் ஏற்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியது. PS5 உடன், சோனி பொழுதுபோக்கு அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. சோனி நிறுவனம் தனது அறிவிப்பில் பயனர்கள் இனி PS ஸ்டோர் வழியாக பொழுதுபோக்கு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை என்று கூறியுள்ளது.

Apple TV+, Disney Plus, Netflix, Spotify, Twitch, YouTube, Amazon Prime Video, MyCanal, Hulu, Peacock, மற்றும் பலவற்றை PS5 வழங்கும் ஆப்ஸ்களாகும். மேலும் இங்கு மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம் Disney Plusஸிற்கான ஆப்ஸ் ஆகும். பிளேஸ்டேஷன் 4க்கான Sony, Disney Plus ஆப்ஸை கொண்டிருக்கவில்லை, இது இந்தியாவில் Disney Plus Hotstar ஆக உள்ளது. இது பயனர்கள் கடந்த காலங்களில் புகார் அளித்த ஒன்று. இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், PS5க்குக் கிடைக்கும் முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களின் பட்டியலிலிருந்து HBO Maxஸை விலக்குவது.

இது இந்தியாவில் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்றாலும், அமெரிக்காவில் உள்ள HBO Max சந்தாதாரர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். சோனி பிளேஸ்டேஷன் 4 Netflix, Amazon Prime, Twitch, Spotify, போன்ற பொழுதுபோக்கு ஆப்ஸ்களையும் ஆதரிக்கிறது. இருப்பினும், Apple TV, Hulu, மற்றும் Disney Plus ஆகியவற்றிற்கான PS4 ஆப்ஸ்கள் எதுவும் இல்லை. சோனி, தனது வலைப்பதிவு இடுகையில், PS5 கன்சோலில் ஒரு புதிய கட்டுப்பாட்டு மையமும் இடம்பெற்றுள்ளது என்றும் இது இசையை கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது என்று கூறியது.

Also read... பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ’ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ!



புதிய கட்டுப்பாட்டு மையம் பயனர்களை சேனல்களுக்கு இடையில் விரைவாக மாறவும், இசையை இடைநிறுத்தவும் அனுமதிக்கிறது. மேலும், பிளேஸ்டேஷன் 5 க்கான புதிய மீடியா ரிமோட்டையும் நிறுவனம் அறிவித்துள்ளது. PS5 இல் பொழுதுபோக்கு அனுபவத்தை வழிநடத்தவும் கட்டுப்படுத்தவும் மீடியா ரிமோட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிமோட், நிறுவனம் கூறியபடி Netflix, Disney Plus, Spotify, மற்றும் YouTubeபிற்கான பிரத்யேக பட்டன்களைக் கொண்ட வெள்ளை நிற ரிமோட் கண்ட்ரோல் வெளி வருகிறது.

இந்த பட்டன்களுக்கு மேலே, பிளே/பாஸ் பாஸ்ட் பார்வேர்ட் மற்றும் பாஸ்ட் ரிவேர்ஸ் கண்ட்ரோல்ஸ், அதோடு கூட கண்ட்ரோல்ஸ் டு நாவிகட்டும் உள்ளன. இந்த ரிமோட் ஆனது டிவிகளில் ஒலி மற்றும் பவர் செட்டிங்ஸ்களை சரிசெய்ய பயனர்களை அனுமதிக்கிறது. Sony ன் தயாரிப்பிற்க்கான இந்த அம்சங்களை அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் இருந்து நீங்கள் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Sony

அடுத்த செய்தி