ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

2024-க்குள் ஸ்மார்ட்போன் கேமராக்கள் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை பின்தள்ளும் - சோனி நம்பிக்கை!

2024-க்குள் ஸ்மார்ட்போன் கேமராக்கள் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை பின்தள்ளும் - சோனி நம்பிக்கை!

Smartphone

Smartphone

Smartphone Camera Quality | மொபைல் டிவைஸ்களில் உள்ள கேமராக்கள் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விஞ்சும் என்கிற சோனி நிறுவனத்தின் இந்த கணிப்பு ஏற்றுக்கொள்ள சற்றே கடினமாகத் தான் உள்ளது, அதுவும் அடுத்த சில ஆண்டுகளில்!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அடுத்த மூன்று ஆண்டுகளில் டிஜிட்டல் சிங்கிள்-லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் (டிஎஸ்எல்ஆர்) கேமராக்களை விட ஸ்மார்ட்ஃபோன் கேமராக்கள் சிறந்த தரத்தை வழங்கும் என்று சோனி நிறுவனம் நம்புகிறது. சமீபத்தில் ஒரு வணிக மாநாட்டின் போது சோனி செமிகண்டக்டர் சொல்யூஷன்ஸின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தெருஷி ஷிமிசுவின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டிற்குள் ஸ்மார்ட்போன் கேமராக்கள் டிஸ்எல்ஆர் கேமராக்களை மிஞ்சும்!

சென்சார் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் ஒப்பிடும் போது ஸ்மார்ட்போன் கேமராவின் தரம் உயர்ந்து கொண்டே வருகிறது தான், அது சோனிக்கும் நன்கு தெரியும். ஆனால் மொபைல் டிவைஸ்களில் உள்ள கேமராக்கள் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விஞ்சும் என்கிற சோனி நிறுவனத்தின் இந்த கணிப்பு ஏற்றுக்கொள்ள சற்றே கடினமாகத் தான் உள்ளது, அதுவும் அடுத்த சில ஆண்டுகளில்!

ஆனால் சோனி நிறுவனத்திடம் தனது கூற்றுகளை நியாயப்படுத்தும் ஆதாரம் உள்ளது மற்றும் ஸ்டில் இமேஜின் தரம் கடுமையான மாற்றத்தைக் காணும் என்றும் கூறுகிறது. இது குறித்து சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்சார்கள், பெரிய அப்பெர்ஷர்கள் மற்றும் மிக முக்கியமாக கம்ப்யூடஷனல் போட்டோகிராஃபியை பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய மேம்பாடு சாத்தியமாகும் என்று தெருஷி ஷிமிசு குறிப்பிடுகிறார்.

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வழியாக கேமராவிற்குள் உட்பொதிக்கப்பட்ட மேம்பட்ட ஏஐ அம்சங்களின் திறனை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதற்கிடையில் சோனியின் அடுத்தக்கட்ட முயற்சிகள் ஆனது மற்ற மொபைல் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் இதேபோன்ற "தத்தெடுக்கப்பட்டு" எதிர்காலத்தில் பயன்படுத்தப்படலாம். இது தவிர வரும் ஆண்டுகளில் கேமரா சென்சாரின் மெகாபிக்சல் எண்ணிக்கை புதிய நிலைகளைக் கடக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது. சாம்சங் போன்ற உற்பத்தியாளர்கள் ஏற்கனவே 200 மெகாபிக்சல் ஸ்மார்ட்போன் சென்சார் மூலம் எதிர்கால ஸ்மார்ட்போன்கள் எப்படி இருக்கும் என்பதை நமக்கு காட்டியுள்ளது.

Also Read : ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

ஏற்கனவே சோனி உடன் ஓப்போ மற்றும் விவோ போன்ற நிறுவனங்கள் தத்தம் மொபைல் டிவைஸ்களின் வழியாக கேமரா துறையில் பலவகையான புதுமைகளுடன் தத்தம் சொந்த கான்செப்ட்-ஐயும் பயன்படுத்தி வருகின்றனர். விவோ எக்ஸ்80 ப்ரோ (Vivo X80 Pro) மற்றும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ (Pixel 6 Pro) போன்ற மாடல்கள், ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபியை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ள நிலைப்பாட்டில், பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் மைக்ரோஸ்கோபிக் சென்சார் போன்ற சேர்க்கைகளுடன், வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் கேமராக்களின் இடம்பெறவுள்ள விஷயங்கள் புகைப்பட / வீடியோ பிரியர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும்.

Also Read : புன்னகையித்தால் போதும் ஈசியாக பணம் செலுத்தலாம் - மாஸ்டர்கார்ட்டின் புதிய முயற்சி!

இது மட்டும் அல்ல. வரவிருக்கும் ஆண்டுகளில் மார்க்கெட் ஃபோர்காஸ்ட் பற்றியும் சோனி நிறுவனம் அதிகம் பகிர்ந்து கொண்டது. 2025ம் ஆண்டளவில் ஸ்மார்ட்போன்கள் அதிவேக வீடியோ தரத்திலும், சிறந்த ஆட்டோ-ஃபோகஸ் முடிவுகளிலும் மேம்பாடுகளை பெறும் என்றும் இந்நிறுவனம் கூறி உள்ளது.

First published:

Tags: Camera, Smartphone, Sony, Technology