இந்தப் புதிய ஏசி-யை நீங்கள் அணிந்துகொள்ளலாம்... அறிமுகம் செய்த சோனி!

மார்ச் 2020 முதல் இந்த ரியான் பாக்கெட்டுகள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் புதிய ஏசி-யை நீங்கள் அணிந்துகொள்ளலாம்... அறிமுகம் செய்த சோனி!
சோனியின் ஏசி சட்டை
  • News18
  • Last Updated: July 27, 2019, 2:36 PM IST
  • Share this:
உலகம் வெப்பமயமாதலால் வெப்பக்காற்றின் தாக்கல் உலக நாடுகள் பலவற்றையும் அதிகம் பாதித்து வருகிறது. இத்தகைய சூழலில் வெளியில் நடமாடவே மக்கள் அச்சப்படுகின்றனர்.

இதனால் நீங்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போதும் குளுகுளுவென இருக்க அணியக் கூடிய வகையிலான ஏசி-யை சோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

‘ரியான் பாக்கெட்’ என்ற அழைக்கப்படும் இந்த ஏ.சி சட்டயை வெயில் தவிக்கும் அனைவரும் அணிந்துகொள்ள முடியும். ஒரு மொபைல் ஃபோனின் எடையைவிட மிகவும் குறைவான எடையிலேயே இந்த ஏசி உள்ளது. சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையிலான பேட்டரி உடன் இந்த ஏசி சட்டை வருகிறது.


2 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால் 90 நிமிடங்களுக்கு ஏசியைப் பயன்படுத்த முடியும். இந்த ஏசியை மொபைல் ஃபோனில் உள்ள ப்ளுடூத் மூலமாக இயக்க முடியும். வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சையையும் குளிர் காலத்தில் உடலின் தேவைக்கேற்ப வெப்பத்தையும் இந்த ஏசி சட்டை தருகிறது.

இந்த ரியான் பாக்கெட் ஏசி-யின் விலை 5,947.63 ரூபாய் ஆகும். ஐந்து சட்டைகள் உடனான ரியான் பாக்கெட்டுகளின் விலை 12,093 ரூபாய் ஆகும். மார்ச் 2020 முதல் இந்த ரியான் பாக்கெட்டுகள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஏற்ற PUBG மொபைல் லைட்..!
First published: July 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்