முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இன்று பூமியைத் தாக்கும் சூரிய புயலால் என்னென்ன பாதிப்பு உண்டாகும்?

இன்று பூமியைத் தாக்கும் சூரிய புயலால் என்னென்ன பாதிப்பு உண்டாகும்?

சூரிய புயல்.

சூரிய புயல்.

Solar storm: சூரிய புயலால் ஏற்படும் காந்த அலைகள் ஜூலை 18ம் தேதியான இன்று பூமியை தாக்கக்கூடும். இதனால் ரேடியோ சிக்னல், ஜிபிஎஸ் சேவை உள்ளிட்டவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சூரிய புயலால் ஏற்படும் காந்த அலைகள் ஜூலை 18ம் தேதியான இன்று பூமியை தாக்கக்கூடும். இதனால் ரேடியோ சிக்னல், ஜிபிஎஸ் சேவை உள்ளிட்டவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூரியன் மேற்பரப்பில் எப்போதும் வேதியியல் வினைகள் நடந்து கொண்டே இருக்கும். அதனால் வெப்பம் உண்டாக்கிக்கொண்டே இருக்கும். இதனால் ஏற்படும் கொரோனல் எஜெக்ஷன் எனப்படும் சூரிய அலைகள் பூமியை வந்தடைய 1-5 நாட்கள் ஆகும்.

Google Doodle : கூகுள் டூடுல் கொண்டாடும் சலா... யார் இவர்?

சில நேரங்களின் சூரியனின் மேற்பரப்பிலிருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் ஏற்பட்டு சக்திவாய்ந்த ஆற்றல்கள் வெளியாகும். இது 'Solar Storm'- சூரிய புயல் என அழைக்கப்படுகிறது. இது பூமியை அடைய 8 நிமிடங்களே ஆகும்.

மின்-காந்த அலைகள் என்ன செய்யும்?

சூரியனில் இருந்து கிளம்பும் இந்த மின் காந்த அலைகள் விண்வெளியில் அப்படியே பரவும். சாதரணமாகவே எல்லா கிரகங்களுக்கும் அதை சுற்றி ஒரு மின் காந்த வளைய சுழற்சி இருக்கும். அதே போல் பூமிக்கும் ஒரு மின்காந்த சுழற்சி உண்டு. சூரியனில் இருந்து வெளிவரும் காந்த அலைகள் பூமியின் மின்காந்த அலைகளை சந்திக்கும் பொது வினைபுரியும். சூரியனில் இருந்து வரும் காந்த அலைகளின் ஏறியதை பொறுத்து அதன் விளைவுகள் அமையும்.

சாதாரண வினைகள்:

துருவ பகுதிகளில் ஏற்படும் மின்காந்த வினையின் விளைவு தான் நார்த் லயிட் எனப்படும் நீல-பச்சை அரோரா ஒளிகள்.

அரோரா ஒளிகள்

இவ்வாறு சூரியனிலிருந்து வெளியாகும் காந்த ஒளியை A, B, C, M, மற்றும் X என ஐந்து முக்கிய வகைகளாக வகைப்படுத்தலாம். இதில் X ஆனது அதிக தீவிரம் கொண்டது.

1859ம் ஆண்டு வலுவான ஒரு சூரிய புயல் பூமியை தாக்கியது. இதன் விளைவாக உலகம் முழுவதும் பிரகாசமான ஒளி ஏற்பட்டது. குறிப்பாக கரீபியன் தீவுப் பகுதிகளிலும் ரொக்கி மலைத் தொடர் பகுதியிலும் மிகவும் பிரகாசமாக இந்த ஒளி தென்பட்டது. இது இரவு நேரத்தையும் பகல் போல காட்டும். இந்த புயலால் வட அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.

இதே போன்ற மற்றொரு பெரிய சூரிய புயல் பூமியை இன்று தாக்கும் என பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) கணித்துள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதி சூரியனிலிருந்து புறப்பட்ட காந்த அலைகள் இன்று பூமியை கடந்து செல்கின்றன. எப்போது வேண்டுமானாலும் பூமியை தாக்கக்கூடும், கணிக்க இயலாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பாதிப்புகள் :

சூரிய புயல், சக்தி வாய்ந்த எக்ஸ் ரே கதிர்களை உருவாக்கும். இந்த கதிர்கள் பூமியில் பயன்படுத்தப்படும் குறைந்த மற்றும் அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ சிக்னல்களை பாதிக்கும் என்று இயற்பியலாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தகவல் தெரிவித்துள்ளார. இதை ரேடியோ பிளாக்அவுட் என அழைக்கின்றனர்.

1859க்கும் 2022ம் ஆண்டுக்கும் இடையே இது போன்ற பல சூரிய புயல்கள் பூமியை தாக்கியுள்ளன. ஆனால் அதன் தீவிரம் குறைவாகவே இருந்தது. இப்போது வரும் புயல் தீவிரம் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் கப்பல்கள், விமானங்கள் சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் விண்வெளி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல் ஜிபிஎஸ் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இணைய சேவையிலும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக உலகம் பல்வேறு நாடுகள் தயாராகி வருகின்றன.

பூமியின் வலி மண்டலம் அரணாக இருப்பதால் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்பாடாது என்று சொல்லப்படுகிறது. அனால் அந்த கதிர்களின் வீரியம் அதிகமானால் புற்றுநோய் ஏற்பட காரணமாகலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கினறன.

First published:

Tags: Sun