முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / மின் பற்றாக்குறையை போக்க விண்வெளியில் சோலார் பேனல்கள்.. சாத்தியமா..?

மின் பற்றாக்குறையை போக்க விண்வெளியில் சோலார் பேனல்கள்.. சாத்தியமா..?

சோலார் பேனல்

சோலார் பேனல்

Solar panels | சூரிய ஒளியிலிருந்து எடுக்கப்படும் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற்று வரும் நிலையில், விண்வெளியிலேயே சோலார் பேனல்கள் வைத்தால் எப்படி இருக்கும்? சாத்தியப்படுமா? இதோ உலகின் மிகப்பெரிய சோலார் தொழில்நுட்ப உற்பத்தியாளரான லாங்கி கிரீன் எனர்ஜி டெக்னாலஜி இதற்காக என்ன செய்துள்ளது என நாமும் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

எதிர்கால மின்சாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு விண்வெளியின் சுற்றுப்பாதையில் சூரியனின் சக்தியைப் பயன்படுத்தி அதை மீண்டும் பூமிக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளைச் சோதிக்கும் திட்டங்களின் முதல்படியாக சோலார் பேனல்களை உலகின் மிகப்பெரிய சோலார் தொழில்நுட்ப உற்பத்தியாளராக லாங்கி கிரீன் எனர்ஜி டெக்னாலஜி விண்வெளியில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

மின்சாரத் தேவைகள் நாளுக்கு நாள் மக்களிடம் அதிகரித்துவருகிறது. அதற்கேற்றார் போல் விண்ணை முட்டும் மின் கட்டணங்களும் மக்களைப் பாடாய் படுத்துகிறது. இப்பொழுதே இப்படியென்றால் வரும் காலத்தில் நிலைமை எப்படி இருக்கும்? என்று யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒருபுறம் அதிகரித்து வரும் மின் கட்டணத்தை சமாளிக்க வீடுகளில் சோலார் பேனல்களை மக்கள் வைக்கின்றனர். சூரிய ஒளியிலிருந்து எடுக்கப்படும் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற்று வரும் நிலையில், விண்வெளியிலேயே சோலார் பேனல்கள் வைத்தால் எப்படி இருக்கும்? சாத்தியப்படுமா? இதோ உலகின் மிகப்பெரிய சோலார் தொழில்நுட்ப உற்பத்தியாளரான லாங்கி கிரீன் எனர்ஜி டெக்னாலஜி இதற்காக என்ன செய்துள்ளது என நாமும் தெரிந்துக் கொள்வோம்.

உலகின் மிகப்பெரிய சோலார் தொழில்நுட்ப உற்பத்தியாளரான லாங்கி கிரீன் எனர்ஜி டெக்னாலஜி அன் கோ இயங்கிவருகிறது. இது சுற்றுப்பாதையில் சூரியனின் சக்தியைப் பயன்படுத்தி அதை மீண்டும் பூமிக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை சோதிக்கும் திட்டங்களின் முதல் படியாக பேனல்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தொழில்துறை மற்றும் கல்வியாளர்களிடமிருந்து கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக விண்வெளியில் சோலார் பேனல்களை வைத்து மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்று இருப்பதாக சீன தெரிவித்திருந்தது. மற்ற நாடுகள் இம்முயற்சியில் ஈடுபட்டாலும் இவற்றை செயல்படுத்த முடியும் என்ற முறை தங்களிடம் உள்ளதாக சீன தெரிவித்திருந்தது.

விண்வெளியில் சோலார் பேனல் எப்படி செயல்படும்?

விண்வெளியில் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலை உள்வாங்கும் வகையில் செயல்படக்கூடிய சோலார் பேனல்கள் அமைக்கப்படும். இதனையடுத்து இந்த ஆற்றல் நுண்ணலைகளாகவோ அல்லது சக்தி வாய்ந்த லேசர் கற்றைகளாகவோ மாற்றப்பட்டு பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். முன்னதாக இந்த ஆற்றலைப் பெறுவதற்கு பூமியில் ஓர் அமைப்பு நிறுவப்பட்டிருக்கும் எனவும் அதன் மூலமாக மின்சாரமாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று சீன ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

Also read : விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட சீன வீரர்கள்..!

மேலும் இந்த சோலார் பேனல்களை ரோபா மற்றும் 3 டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்ணில் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் வருகின்ற 2050க்குள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை திட்டம் வெற்றிக்கரமாக விண்ணில் நிறுவப்படும் போது, எதிர்காலத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இருக்க வாய்ப்பில்லை. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் உலகம் முழுவதும் அனைவரின் வீடுகளிலும் நிச்சயம் தேவைப்படும் ஆற்றலாக அமையும்.

Also read : ஸ்மைல் ப்ளீஸ்.. மனிதர்களை போல் சிரித்து பேசும் எரிகா ரோபோ..!

top videos

    குறிப்பாக சீனாவின் விண்வெளித் திட்டத்துடன் சூரியத் துறையின் ஒத்துழைப்பின் முதல் படியாகவும், கிரகங்களுக்கு அப்பாற்பட்ட மின் நிலையங்களை நோக்கியதாகவும் இருக்கும் என்று சீனா ஸ்பேஸ் அறக்கட்டளையின் தலைவர் வு ஜிஜியன் கூறியுள்ளார். மேலும் ஷான்சியின் ஜிடியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீன ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில், விண்வெளியில் இருந்து சூரிய சக்தியைக் கடத்த வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் முழு-அமைப்பு மாதிரியை வெற்றிகரமாக சோதித்ததாகக் கூறியுள்ளனர். இதோடு கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விஞ்ஞானிகளும் 2013 இல் 100 மில்லியன் டாலர் மானியத்திற்குப் பிறகு விண்வெளி சூரிய திட்டத்தைத் தொடங்கினர். அதே நேரத்தில் ஜப்பான், ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள குழுக்களும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Electricity, Space, Technology