• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • சமூக ஊடகத்தளங்கள் இனி எப்படி மாறும்? - வல்லுநர்களின் கணிப்பு!

சமூக ஊடகத்தளங்கள் இனி எப்படி மாறும்? - வல்லுநர்களின் கணிப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த சமூக வலைத்தள பயன்பாட்டையும் தற்போது இருப்பதையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சமூக வலைதளம் எப்படி பிரம்மாண்டமாக உங்கள் கண்முன்னே வளர்ந்துள்ளது என்பதை உணர முடியும்.

  • Share this:
கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் வளர்ச்சியால் சமூக வலைத்தளங்கள் நம்முடைய தகவல் தொடர்பு முறைகளை முற்றிலுமாக மாற்றிவிட்டது. பொழுதுபோக்கு என்பதைக் கடந்து, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட புரட்சி ஒட்டுமொத்த மக்களின் குரலாகவும், மிகப்பெரிய மாற்றத்திற்கான காரணங்களாகவும் இருந்துள்ளது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் என்றே ஒரு மீடியம் ஒன்று உருவானது. இவர்களுக்காகவே கேள்விகள் கேட்கப்பட்டு, மார்க்கெட்டிங் முறைகள் கண்டறியப்பட்டு, இவர்களுக்காகவே பதில்களையும் வழங்கப்பட்டு வருகிறது.

கம்யூனிகேஷன் முறைகளை மட்டுமின்றி பல்வேறு வணிகங்களையும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துவிட்டது. ஓராண்டுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது. அதில் சமூக ஊடக நெட்வொர்க்குகளுக்கும் பெரிய பங்கு உள்ளது.

பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த சமூக வலைத்தள பயன்பாட்டையும் தற்போது இருப்பதையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சமூக வலைதளம் எப்படி பிரம்மாண்டமாக உங்கள் கண்முன்னே வளர்ந்துள்ளது என்பதை உணர முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த சூழலே வேறு. இணையத்தளங்கள், சோஷியல் மீடியா வலைத்தளங்கள் பரவலாக பயன்படுத்த தொடங்கப்பட்ட காலத்தில் அனைவருமே எச்சரிக்கையாக இருந்தார்கள். இந்த ஊடகங்களுக்கு தெளிவான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் இருந்த போது, எந்த அளவுக்கு இதனை நம்புவது என்று பலரும் தயங்கினர். ஆனால், தற்போது அப்படியில்லை. பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றிருக்கும் சமூக வலைத்தளங்களும் நாளை மாற்றத்துக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

இதில் பெரிதாக பாதிக்கப்படக் கூடியவர்கள், டிஜிட்டல் தொழில்முனைவோர் தான். இனி சமூக ஊடகங்கள் முதன்மையான நிலையில் இருக்க வாய்ப்புகள் குறைவே. எனவே, எந்த வடிவத்தில் மாறுகிறதோ, அதற்கு ஏற்றார் போல டிஜிட்டல் தொழில்முனைவோர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிராவை சேர்ந்த சோசியல் மீடியா வல்லுநரான அஜீத் குன்வான்ட் பார்ஸ் கூறினார்.

டிஜிட்டல் மீடியாவால் ஈர்க்கப்படுவது என்பது புதிதாக ஒரு பாடலை விரும்புவது போலத் தான். விருப்பமும் ஆர்வமும் சில நாட்கள் தான் இருக்கும். இணைய தளத்தைப் பொறுத்தவரை, வலைத்தளமாக இருந்தாலும் சரி, சமூக ஊடக நெட்வொர்க்குகளாக இருந்தாலும் சரி, அதனுடைய முக்கியமான பங்கு, அவற்றில் பகிரப்படும் உள்ளடக்கத்தில் (Content) தான் உள்ளது.

Also read... ஆண்ட்ராய்டு மொபைலில் உங்களின் லொக்கேஷன் கண்காணிப்பை நிறுத்துவது எப்படி?

ஒவ்வொரு நாளும் சோஷியல் மீடியா நெட்வொர்க்குகளில் பதிவு செய்யப்படும் யூசர்களின் எணிக்கை அதிகரித்து வந்தாலும், மிகக் குறைந்த அளவிலான நபர்களே அனைத்து யூசர்களுக்கும் தேவையான உள்ளடக்கத்தை உருவாக்கியும், பகிர்ந்தும் வருகிறார்கள். எனவே, இந்த இடைவெளி, டிஜிட்டல் உலகை பெரிய அளவில் பாதிக்கும் வாய்ப்புள்ளது. டிஜிட்டல் மீடியா யூசர்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு பற்றியும் அவசியமாக பேச வேண்டும்.

முன்பை விட இப்போது சைபர் செக்யூரிட்டி எனப்படும் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதை மேலும் வலுப்படுத்தும் அதே நேரத்தில், 24X7 சமூக-உளவியல் அணுகுமுறையையும் வழங்க வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்து. இணையம் வழியாக சந்திப்புகளை உருவாக்கி, இதற்கான உத்திகளை உருவாக்கி, விழிப்புணர்வை பரப்புவதன் மூலம், டிஜிட்டல் மீடியாவை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் வல்லுநர்களின் கருத்தாக இருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: