Home /News /technology /

விதிமீறல்கள் புகார்கள் மீதான நடவடிக்கை: கம்ப்ளையன்ஸ் அறிக்கை வெளியிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள்!

விதிமீறல்கள் புகார்கள் மீதான நடவடிக்கை: கம்ப்ளையன்ஸ் அறிக்கை வெளியிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள்!

Facebook

Facebook

Social Media | 5 மில்லியன் யூசர்களுக்கு மேல் இருக்கும் எந்தவொரு டிஜிட்டல் தளமும், மாதாந்திர / குறிப்பிட்ட கால இடைவெளியில் கம்ப்ளையன்ஸ் அறிக்கையை தயாரித்து, விதிமீறல் புகார்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்ற தகவலை சேர்த்து வெளியிட வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
    ஐடி விதிகள் 2021 இன் படி, ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படும் பதிவுகள், பிரைவசியில் தலையிடும் விஷயங்கள், நேரடியாக அல்லது மறைமுகமான பாலியல் துன்புறுத்தல், ஆபாசமான புகைப்படங்கள் / வீடியோக்கள் பகிர்வது என்று பல விஷயங்கள் விதிமீறலுக்கு உட்பட்டதாகும். எனவே, சமூக வலைத்தளங்களை நடத்தும், நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இதைப் பற்றிய விவரங்கள் பகிரப்பட்டன.

    கடந்த சில மாதங்களாக, விதிமீறல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதைப் பற்றிய மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, அது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் தளங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த தளங்களில் எவை எல்லாம் விதிமீறல்கள் என்பதைப் பற்றி நிறுவனங்கள் கம்ப்ளையன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளன.

    5 மில்லியன் யூசர்களுக்கு மேல் இருக்கும் எந்தவொரு டிஜிட்டல் தளமும், மாதாந்திர / குறிப்பிட்ட கால இடைவெளியில் கம்ப்ளையன்ஸ் அறிக்கையை தயாரித்து, விதிமீறல் புகார்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்ற தகவலை சேர்த்து வெளியிட வேண்டும்.

    இந்தியாவில் 17.5 மில்லியன் பதிவுகளை ஏற்கனவே 13 விதிமீறல் கேட்டகரிகளின் அடிப்படையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஆய்வு செய்ததாக செய்தி வெளியிட்டது. அதே நேரத்தில், டிவிட்டர், கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்ளையன்ஸ் அறிக்கையை நிறைவு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.



    எந்த விதமான உள்ளடக்கங்கள் விதிமீறலாகக் கருதப்படுகின்றன?

    * குழந்தைகளுக்கு, சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்து விளைவிப்பது
    * பாலின அடிப்படையில் கிண்டல் செய்வது, பாலியல் உள்ளடக்கம்
    * வன்முறைய தூண்டுவது
    * தெரிந்தோ தெரியாமலோ, ஏதேனும் ஒரு தகவலை தவறாக வெளிப்படுத்தி, அதை வேறொருவர் உண்மையென்று நம்புவது

    Also Read : உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால்  உடனடியாக மீட்டெடுப்பது எப்படி.!!

    விதிமீறல் புகார்கள் மீது ஃபேஸ்புக் எடுத்த நடவடிக்கைகள் :

    ஸ்பாம், ஹேட் ஸ்பீச், ஆபாசம், குழந்தைகளுக்கு ஆபத்தானது, வன்முறை சார்ந்தது, நிர்வாணம், பாலியல் சார்ந்தது, ஒருவரை மோசமாக கிண்டல் செய்வது ஆகியவை பல பிரிவுகளின் கீழே விதிமீறலாக கருதப்படுகிறது. மே 1 முதல் மே 31 வரையிலான புகார்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்ததில், ஃபேஸ்புக் மட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராமிலும் கூட, யூசர்களுக்கு தொந்தரவாக இருக்கும் புகைப்படங்களை நீக்கியிருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 17.5 மில்லியன் உள்ளடக்கங்களில், 3.7 மில்லியன் உள்ளடக்கம் வன்முறையாகவும், 2.6 மில்லியன் உள்ளடக்கம் அடல்ட் நியூடிட்டி மற்றும் பாலியல் செயல்பாடு பிரிவிலும், 9.3 மில்லியன் உள்ளடக்கம் ஸ்பேம் என்றும் நிறுவனம் தெரிவித்தது.



    டிவிட்டர் எடுத்த நடவடிக்கைகள் :

    டிவிட்டர் நிறுவனம், இது போன்ற உள்ளடக்கங்கள் நீக்கம் பற்றி எந்த விதமான தகவலும் தெரிவிக்கவில்லை என்றாலும், தனது விதிகளை மீறியதற்காக, 46,000 கணக்குகளை ப்ளாக் செய்ததாக மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இதில், தீவிரவாதத்தில் ஈடுபட்டமைக்காக 2,870 கணக்குகளும், பாலியல் சார்ந்த, நிர்வாணம், குழந்தைகளுக்கு ஆபத்தானவை என்ற பிரிவுகளில் உள்ளடக்கங்கள் காணப்பட்ட 43,656 கணக்குகளும் நீக்கப்பட்டன.

    Also Read : ஒரு போன் கால் மூலம் WhatsApp அக்கவுண்ட் திருடப்படுவது எப்படி.? இதிலிருந்து தப்பிக்கும் வழிகள்!

    கூகுள் நீக்கிய பதிவுகள் :

    மாதாந்திர டிரான்ஸ்பெரன்சி அறிக்கையின் படி, கிட்டத்தட்ட 4 லட்சம் உள்ளடக்கங்களை, ஆட்டோமேட்டிக் கருவி மூலம் கூகுள் இந்தியா நீக்கியுள்ளதாக கூறியுள்ளது. மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வது, வன்முறை தூண்டும் உள்ளடக்கம் ஆகியவை நீக்கப்பட்டன.
    Published by:Selvi M
    First published:

    Tags: Social media, Technology

    அடுத்த செய்தி