Home /News /technology /

Snapchat வெப் வெர்ஷன் அறிமுகம்.. இனி கணினி வாயிலாகவும் சேட் செய்யலாம்

Snapchat வெப் வெர்ஷன் அறிமுகம்.. இனி கணினி வாயிலாகவும் சேட் செய்யலாம்

ஸ்னாப் சேட்

ஸ்னாப் சேட்

Snapchat ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய இணையப்பதிப்பாக ஸ்னாப் இன்க் (Snap Inc ) மூலம் இனி யூசர்கள் கணினி வாயிலாக சேட் செய்யவும், புகைப்படம் எடுக்கவும் மற்றும் வீடியோ கால் அழைப்பு மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஸ்னாப்சாட் (Snapchat) என்பது மொபைல் ஆப் ஆகும். இந்த ஆப் மூலம் மென்பொருள்களின் உதவியோடு தங்களது மொபைல் போன்களிலிருந்து ஸ்னாப்சாட் யூசர்கள் புகைப்படங்களையும், காணொளிகளையும் நண்பர்களுக்கு அனுப்பலாம். குறிப்பாக இவர்கள் அனுப்பிய படங்களும், கணொளிகளும் ஸ்னாப் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த மெசேஜ்கள் 10 நொடிகள் மட்டுமே காணமுடியும். அதன்பிறகு தானாக நீக்கப்படும் வசதிகள் ஸ்னாப்சாட்டில் உள்ளது.

இந்த செயலியை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்கள் பயன்படுத்திவரும் நிலையில், தற்போது புதிய இணையப்பதிப்பானது ஸ்னாப் இன்க் (Snap Inc ) என்பதை ஸ்னாப்சாட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்னாப் இன்க் மூலம் இனி பயனர்கள், மொபைல் தவிர தங்களது கணினிகளின் வாயிலாக அதவாது கம்ப்யூட்டரின் வாயிலாக உங்களது நண்பர்களுக்கு சாட் செய்யவும், புகைப்படம் எடுக்கவும் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளவும் அனுமதியளிக்கிறது.

இந்த புதிய சேவையானது ஜூலை 18ம் தேதி முதல் ஸ்னாப்சாட் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக இருக்கும் என்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள சந்தாதாரர்களுடன் முதலில் ஸ்னாப் இன்க் சேலை தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இனி நீங்கள் எப்போது வேண்டுமனாலும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு உங்களது நண்பர்களுடன் ஜாலியாக உரையாடலாம்.



 

மேலும் இணையத்திற்கான ஸ்னாப்சாட், லென்ஸ்களுடன் நீங்கள் அனுப்பும் சாட்டுகளுக்கு ரியாக்சன்களுடன் பதில்களை அனுப்பும் அம்சங்களைக் கொண்டுள்ளதோடு விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் இந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த புதிய வசதியின் உதவியோடு இனி ஸ்னாப் பயனர்கள் உங்களது நண்பர்களுக்கு சுலபமாக மெசேஜ் அனுப்பலாம். அதிலும் அவர்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ? அதனை ரியாக்சன்களோடு அனுப்பமுடியும்.

also read : பெர்சனலாக இறங்கி அடிக்கும் இமெயில் மோசடியாளர்கள் - சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூட தடுமாற கூடும்.!

நிச்சயம் இது ஸ்னாப் பயனர்களுக்கு புதிய அப்டேட்டாகவே இருக்கும். முன்னதாக snapchat புகைப்படங்களை அனுப்பும் திறமையை தவிர பயனர்கள் செய்திகள் மற்றும் கதைகளை வெளியிடுவதன் மூலம் பின்தொடர்பவர்களை நீங்கள் அதிகரித்து கொள்ளலாம் என்ற வசதிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஸ்னாப்சாட் நிறுவனம் தெரிவிக்கையில், Snapchat பயன்பாட்டின் கட்டணப் பதிப்பானது, அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு $3.99 மற்றும் சில சந்தைகளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இது பெரும்பாலும் விளம்பரங்களை சார்ந்திருக்கும் வருவாய் மாதிரியிலிருந்து ஒரு முக்கிய படியாக உள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் பலவீனமான நுகர்வோர் செலவினங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் நிறுவனங்கள் விளம்பர வரவு செலவுத் திட்டங்களைக் குறைப்பதால் சமூக ஊடக நிறுவனங்கள் சிக்கலில் உள்ளன. எனவே இரண்டாம் காலாண்டில் வருவாய் மற்றும் லாப இலக்குகளை இழக்க நேரிடும் என்றும், பணியமர்த்தலை மெதுவாக்க வேண்டும் மற்றும் செலவுகளை குறைக்க வேண்டும் என்றும் மே மாதம் ஸ்னாப் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 71% சரிந்துள்ளன எனவும் ஸ்னாப்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Computer

அடுத்த செய்தி