ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் நல்ல ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டுமா.. இந்த பட்டியலை பாருங்கள்!

ஸ்மார்ட் வாட்ச்

இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் பல சிறந்த ஸ்மார்ட் வாட்சுகள் விற்கப்பட்டு வருகின்றன

  • Share this:
ஆரோக்கியம் மற்றும் பிட்னஸை கண்காணிக்க உதவும் ஸ்மார்ட் வாட்சுகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. நம் நாட்டில் ஸ்மார்ட் ஃபோன்களை போலவே பலரால் ஸ்மார்ட் வாட்சுகளும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல ஸ்மார்ட் வாட்சுகளை பலரும் தங்கள் ஸ்மார்ட் ஃபோனுக்கான துணை அக்சஸரிபொருளாகவும் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். என்றாலும் குறிப்பாக கடந்த ஒன்றரை வருடங்களாக கோவிட் -19 தொற்றுக்கு இடையே ஸ்மார்ட் வாட்சுகள் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்து வருகின்றன.

ஏனென்றால் சுகாதார கண்காணிப்பு அம்சங்களைத் தவிர யூஸர்கள் தற்போது ஸ்மார்ட் வாட்சுகள் மூலம் தங்களது ரத்த ஆக்ஸிஜன் அளவை (SpO2) இப்போது கண்காணிக்க முடியும் என்பதால். இதனிடையே இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் பல சிறந்த ஸ்மார்ட் வாட்சுகள் விற்கப்பட்டு வருகின்றன. எனவே நீங்கள் ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்க திட்டமிட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் உங்களுக்கு உதவும்.

ஒன்பிளஸ் வாட்ச்


ஒன்பிளஸ் வாட்ச் (OnePlus Watch):

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் 326பிபிஐ பிக்சல் அடர்த்தியுடைய 1.39-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் டிஸ்பிளே AMOLED ஆகும். இது சர்குலர் டயல் மற்றும் ரத்த ஆக்ஸிஜன் (SpO2) ட்ராக்கிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக இதய துடிப்பு மற்றும் தூக்கத்தை கண்காணிக்க முடியும். இந்த வாட்சில் 110-க்கும் மேற்பட்ட வொர்கவுட் மோட்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் வாட்ச்சை ஒன்பிளஸ் டிவியுடன் கனெக்ட் செய்து ரிமோட் கன்ட்ரோலாக பயனப்டுத்த முடியும். அதிக பயன்பாட்டுடன் ஒரு வார பேட்டரி ஆயுளை நிறுவனம் கூறுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹெவி யூசேஜுடன் ஒரு வாரம் வரை பேட்டரி நீடிக்கும் என்று தனது முதல் ஸ்மார்ட் வாட்ச் பற்றி குறிப்பிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இந்த வாட்சின் விலை ரூ.14,999.

ரியல்மி வாட்ச் எஸ் ப்ரோ


ரியல்மி வாட்ச் எஸ் ப்ரோ (Realme Watch S Pro):

ரியல்மி வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட் வாட்சானது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி மற்றும் 1.39 இன்ச் AMOLED ரவுண்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த வாட்ச் டிஸ்பிளே ரெசல்யூஷன் 454 × 454 பிக்சல்ஸ் ஆகும். அவுட்டோர் ரன், இன்டோர் ரன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கல் பிட்னஸ் ஆர்வலர்களுக்காக இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்இந்த டிவைஸ் 24 × 7 இதய துடிப்பு மானிட்டர் மற்றும் ரத்த ஆக்ஸிஜன் நிலை மானிட்டருடன் வருகிறது. இதன் விலை ரூ.9,999.

ஃபிட்பிட் வெர்சா 2


ஃபிட்பிட் வெர்சா 2 (Fitbit Versa 2):

ஃபிட்பிட் ஸ்மார்ட் ஏராளமான வாடிக்கையார்களை கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க பிராண்ட் ஆகும். இது சமீபத்தில் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet-ல் வாங்கப்பட்டது. OLED டிஸ்பிளேவுடன் வரும் ஃபிட்பிட் வெர்சா 2 ஸ்மார்ட் வாட்ச்சானது, அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட் மற்றும் Spotify ஹேண்ட்ஸ்ஃப்ரீ அக்கசஸுடன் வருகிறது. மேலும் இது 50மீட்டர் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஹார்ட் ரேட் ட்ராக்கிங், சைக்கிளிங், யோகா, ரன்னிங் போன்ற ஸ்டான்டர்ட் பிட்னஸ் ட்ராகிங் மோட் உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தல் சுமார் 5 நாட்கள் வரை இந்த ஸ்மார்ட் வாட்ச் தாக்கு பிடிக்கும். இதன் விலை ரூ.13,990.

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2 (Amazfit GTR 2):

இதன் விலை ரூ.12,999. இந்த ஸ்மார்ட் வாட்ச்சானது குறிப்பாக கிளாசிக் ரவுண்ட் ஷேப் வாட்ச் ரசிகர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1.39 அங்குல AMOLED டிஸ்பிளே,326பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்டது மற்றும் 450 nits அளவில் பீக் பிரைட்னஸை வழங்குகிறது. இது ரத்த ஆக்ஸிஜன் செறிவு அளவீட்டை பெற்றிருந்தாலும், மருத்துவ ரீதியாக இது அங்கீகரிக்கப்படவில்லை. 417mAh பேட்டரியை கொண்டு அதிகபட்சம் 14 நாட்கள் பேட்டரி ஆயுளை யூசர்களுக்கு வழங்குகிறது. இதிலிருக்கும் 12 தொழில்முறை ஸ்போர்ட்ஸ் மோட்கள் மூலம் யூஸர்கள் சுகாதார அம்சங்களை கண்காணித்து கொள்ள முடியும்.

சியோமி மி வாட்ச் ரிவால்வ் ஆக்ட்டிவ்


சியோமி மி வாட்ச் ரிவால்வ் ஆக்ட்டிவ் ( Xiaomi Mi Watch Revolve Active ):

இதன் விலை ரூ. 9,999. இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் ஆல்வேஸ் ஆன் அம்சத்துடன் வருகிறது. பிட்னஸிற்காக இந்த வாட்சில் இன்டகிரேடட் VO2 மேக்ஸ் சென்சார், SpO2 சென்சார், GPS, ஸ்லீப் மானிட்டர், ஹார்ட் ரேட் மானிட்டர் மற்றும் பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் 117-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை சப்போர்ட் செய்கிறது.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: