ரூ.30,000க்கு குறைவான Dual முன்பக்க கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள்!

ரூ.30,000க்கு குறைவான Dual முன்பக்க கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள்!

ரியல் மீ எக்ஸ் 3 ஸ்போர்ட்ஸ்ல் முன்பக்கத்தில், டூயல் செல்ஃபி கேமரா அமைப்பில் 16 மெகாபிக்சல் கேமரா மற்றும் 105 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளன.

ரியல் மீ எக்ஸ் 3 ஸ்போர்ட்ஸ்ல் முன்பக்கத்தில், டூயல் செல்ஃபி கேமரா அமைப்பில் 16 மெகாபிக்சல் கேமரா மற்றும் 105 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
அண்மைக்காலமாக முன்பக்க கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மக்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது. வீடியோ காலிங் மற்றும் செல்பி-ஐ மக்கள் அதிகம் விரும்புவதால், குறைவான விலையில், கிளாரிட்டியான லென்ஸ் வசதி கொண்ட செல்போன்களின் விவரத்தை சந்தையில் அதிகம் தேடுகின்றனர். சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளரின் விருபத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஒன்றுக்கு, இரு முன்பக்க கேமரா வசதியுடன் 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்கின்றன. டூயல் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ( OnePlus)

ஒன்பிளஸின் பட்ஜெட் ஸ்மார்ட்போன், OnePlus Nord-ல் 6.44 இன்ச் ஃபுல் HD + ஃப்ளூயிட் அமோலேட் டிஸ்ப்ளே (Fluid AMOLED) இடம்பெற்றுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 G SoC உள்ளது. முன்பக்க டூயல் கேமரா வசதி உள்ளது. அவற்றில், 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை அடங்கும். முன் கேமரா 4f வீடியோவை 60fps -ல் பதிவு செய்ய முடியும். இந்தியாவில் OnePlus Nord-ன் விலை ரூ.24,999 ஆக தொடங்குகிறது. 6 ஜிபி மற்றும் 64 ஜிபி விருப்ப ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது.

ரியல் மீ எக்ஸ் 3( Realme X3)

ரியல் மீ எக்ஸ் 3 ஸ்போர்ட்ஸ்,  6.6 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜைக் (Storage)கொண்டுள்ளது. முன்பக்கத்தில், டூயல் செல்ஃபி கேமரா அமைப்பில் 16 மெகாபிக்சல் கேமரா மற்றும் 105 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளன. முன் கேமராக்கள் வைட்-ஆங்கிள் மோட் (mode), டைம் லேப்ஸ் புகைப்படம் எடுத்தல், Front பனோரமா, சூப்பர் நைட்ஸ்கேப் ஆகிய மோட்களை செட் செய்து புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும். முன் கேமரா முழு எச்டி வீடியோக்களை 30fps இல் பதிவு செய்யும். இந்தியாவில் ரியல்மீ தொலைபேசியின் அடிப்படை விலை ரூ.24,999 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி + விருப்ப 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

விவோ வி19 (Vivo V19)

Vivo V19, 6.44 இன்ச் புல் எச்டி + சூப்பர் அமோலேட் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 SoC ஆல் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆப்ஷன் உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, முன் கேமரா அமைப்பில் 32 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மிகத்தெளிவாக செல்ஃபி எடுக்கவும், ஒலி அளவை குறைக்கும் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. 48 மெகா பிக்சலில் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி +128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.24, 990 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Also read... விரைவில் வருகிறது Google Fit App! இதயத்துடிப்பு, சுவாசத்தை இனி நீங்களே அறிந்துகொள்ளலாம்

ஃபோகோ எக்ஸ்2 (Poco X2)

Poco X2, 6.67 அங்குல புல் எச்டி + ரியாலிட்டிஃப்ளோ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC, 8 ஜிபி ரேம் வரை, மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 2 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன. போட்ரெய்ட் மற்றும் குறைந்த ஒலி மேம்பாடு ஆகியவை பியூட்டி மோட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஓப்போ (Oppo)

இந்த வரிசையில் கடைசி ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்துவது Oppo F17 Pro ஆகும். இந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் பல வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 6.43 அங்குல புல் எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன், 2 மெகாபிக்சல் சென்சார் கேமராவுடன் வருகிறது. முன்பக்கத்தில் உள்ள பிரைமரி கேமராவில் புல் எச்டி வீடியோக்களை 30fps -ல் பதிவு செய்ய முடியும். பதிவான வீடியோக்களை நைட் மோட் உள்ளிட்ட பலவகையான மோட்களுக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஸ்மார்ட்போன் 22,990 ரூபாய் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: