ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவில் சரிவை சந்தித்த ஸ்மார்ட் போன் உற்பத்தி... காரணம் என்ன?

இந்தியாவில் சரிவை சந்தித்த ஸ்மார்ட் போன் உற்பத்தி... காரணம் என்ன?

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

xiaomi 21.2 % பங்கையும், ஆப்பிள் பிரிமியம் பிரிவில் 63 சதவீத பங்கையும் பெற்றுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  ஸ்மார்ட்போன்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தங்களிடம் உள்ள சிறு தொகையை வைத்துக்கூட சந்தையில் பல மாடல்களில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களை மக்கள் வாங்குகின்றனர். இவ்வாறு ஒருபுறம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து வந்தாலும் கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும் போது செல்போன்களை உற்பத்தி செய்து அனுப்புவது என்பது குறைந்துள்ளதாக இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…

  ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி குறையக் காரணம் என்ன?

  இந்தியாவில் செல்போன்களின் தேவை குறைந்து வருவது, விலை அதிகரிப்பு, அதிக மாடல்களில் செல்போன்கள் கிடைப்பது போன்ற பல்வேறு காரணங்களால் செல்போன்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 10 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து பண்டிகை நாள்கள் வந்த போதும் செல்போன்களின் ஏற்றுமதி வெகுவாக சரிந்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 43 மில்லியன் செல்போன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

  குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஏற்றுமதி செய்யப்பட்ட செல்போன்களின் எண்ணிக்கையுடன் இதை ஒப்பிடும் போது இது மிகக்குறைந்த எண்ணிக்கை என இன்டர்நேரஷனல் டேட்டா கார்ப்பரேஷன் எனப்படும் ஐடிசி டிவைஸ் ரிசர்ச் அசோசியேட் துணைத் தலைவர் நவ்கேந்தர் சிங் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் செல்போன் துறை 10 சதவிகித வீழ்ச்சியை அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

  குறிப்பாக மொபைல் துறையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக 5ஜி சேவை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது வரக்கூடிய அனைத்து செல்போன்களும் 5ஜி சேவையை பெற்றிருக்கும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் மொத்த பங்கு 36 சதவீதமாக இருந்தது என்றும் இரண்டாவது காலாண்டில் 6 மில்லியன் யூனிட்களாக சரிந்துள்ளது என்கிறார் ஐடிசி டிவைஸ் ரிசர்ச் அசோசியேட் துணைத் தலைவர் நவ்கேந்தர் சிங்.

  மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட்... வேகமெடுக்கும் ஆப்பிள்.... சிறப்பம்சம் என்ன?

  மேலும் கையிருப்பு அதிகரிப்பு, பண்டிகை காலங்களுக்குப் பிறகு தேவை குறைவு ஆகியவற்றினால் டிசம்பர் காலாண்டிலும் ஏற்றுமதி குறைவு என தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக ஏற்றுமதி 8-9 சதவீதம் குறைந்து சுமார் 150 மில்லியன் யூனிட்களாக இருக்கும் என்றும் சிங் கூறியுள்ளார்.

  குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இதே நிலை தான் வருகின்ற 2023ல் தொடரும் எனவும் 4ஜி ஸ்மார்ட்போன் யூசர்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவதைப் பொருத்து செல்போன் சந்தையின் வளர்ச்சி நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சமீபத்திய அறிக்கையின் படி, இந்த காலாண்டில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சந்தையில், xiaomi 21.2 % பங்கையும், ஆப்பிள் பிரிமியம் பிரிவில் 63 சதவீத பங்கையும் பெற்றுள்ளது. Xiaomi தனது முன்னணியைத் தக்கவைத்துக் கொண்டது என்றாலும், செப்டம்பர் 2022 காலாண்டில் ஏற்றுமதி 18 சதவீதம் குறைந்தது என்றும், 70 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றுமதி ஆன்லைன் விற்பனைக்குச் சென்றதாகவும் அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

  இந்தியாவில் விஎல்சி வீடியோ பிளேயருக்கு தடை நீக்கம்… மத்திய அரசு அறிவிப்பு

  இதேப் போன்று சாம்சங் 18.5 சதவீத பங்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதைத்தொடர்ந்து Vivo 14.6 சதவீத பங்கையும், Realme 14.2 சதவீதத்தையும், oppo 12.5 சதவீத பங்கையும் பெற்றுள்ளன. USD 500க்கு மேல் உள்ள பிரீமியம் பிரிவு 64 சதவீத வளர்ச்சி மற்றும் 8 சதவீத பங்குகளுடன் வளர்ச்சிப் பெற்றுள்ளது. சாம்சங் 22 சதவீதத்துடன் மற்றும் ஒன்பிளஸ் ஒன்பது சதவீதத்துடன் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Smartphone