பெரும் வீழ்ச்சியைச் சந்திக்காத ஸ்மார்ட்போன் விற்பனை!

சீனாவில் மட்டும் ஆன்லைன் போன் விற்பனை 38 சதவிகிதமும் ஆஃப்லைன் விற்பனை 50 சதவிகித வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதாம்.

பெரும் வீழ்ச்சியைச் சந்திக்காத ஸ்மார்ட்போன் விற்பனை!
மாதிரிப்படம்
  • Share this:
சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் பெரிய வீழ்ச்சியை ஏதும் சந்திக்கவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

கொரோனா அச்சம் உலகம் எங்கும் தற்போது பரவி உள்ளது. கடந்த ஜனவரி முதலே சீனாவில் கொரோனா பாதிப்பு தொடங்கிவிட்டது. ஆனாலும், கடந்த பிப்ரவரி ஸ்மார்ட்போன் விற்பனை வெறும் 14 சதவிகித வீழ்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளது.

இது பெரிய வீழ்ச்சியாகவே இல்லை என ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனராம். ஆனால், இந்த மாதம் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 18 சதவிகிதம் வீழ்ந்துள்ளதாம். அதனால், ஸ்மார்ட்போன் சந்தை நிலை குறித்த சரியான விகிதம் இந்த மார்ச் மாத விற்பனையில் தெரியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


மற்ற எந்த நாட்டையும்விட சீனாவில் மட்டும் ஆன்லைன் போன் விற்பனை 38 சதவிகிதமும் ஆஃப்லைன் விற்பனை 50 சதவிகித வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதாம்.

மேலும் பார்க்க: ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்கவும்- டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading