2019-ல் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை வீழ்ச்சியடையும் - ஆய்வு

2020-ம் ஆண்டில் சர்வதேச அளவில் 5ஜி தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமானதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: August 2, 2019, 1:47 PM IST
2019-ல் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை வீழ்ச்சியடையும் - ஆய்வு
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 2, 2019, 1:47 PM IST
ஸ்மார்ட்ஃபோன் விற்பனை இந்த ஆண்டு 2.5 சதவிகிதம் வரையில் வீழ்ச்சி அடையும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் நெட்வொர்க் குறித்து ஆய்வு செய்யும் காட்னர் நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதுவரையில் இல்லாத அளவுக்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பனை வீழ்ச்சி இந்தாண்டு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கணினி, டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான சர்வதேச விற்பனையும் கடந்த ஆண்டைவிட 3.3 சதவிகிதம் குறையும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து காட்னர் நிறுவன ஆய்வு இயக்குநர் ரஞ்சித் அட்வால் கூறுகையில், “ஸ்மார்ட்ஃபோன்களைப் பொறுத்த வரையில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் உபயோகக் காலம், திறன் மற்றும் அனுபவத்தை சிறப்பானதாகக் கொடுக்கவேண்டும். இல்லையேல் பயனாளர்களால் ஒதுக்கப்படும் நிலை வரும்” என்றார்.

நல்ல உயர் ரக ஒரு ஸ்மார்ட்ஃபோனின் ஆயுட்காலம் என்பது 2.6 ஆண்டுகளிலிருந்து தற்போது 2.9 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் சர்வதேச அளவில் 5ஜி தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமானதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் அமெரிக்கா, தென் கொரியா, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மட்டுமே 5ஜி தொழில்நுட்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: சுழலும் கேமிரா உடன் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி A80!
First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...