முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியாவில் அறிமுகமாகியுள்ள புதிய 5G மொபைல் iQOO 9T - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள புதிய 5G மொபைல் iQOO 9T - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

புதிய 5G மொபைல் iQOO 9T

புதிய 5G மொபைல் iQOO 9T

iQoo 9T 5G மொபைலின் விலை இந்தியாவில் ரூ.54,999 முதல் தொடங்குக்கிறது. இதனை இந்தியாவில் அமேசான் முலம் ஆன்லைனில் வாங்காலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்மார்ட் ஃபோன் பிராண்டான iQOO அதன் லேட்டஸ்ட் மொபைலான iQOO 9T-ஐ இந்தியாவில் ஆன்லைனில் அறிமுகமாகியுள்ளது. இந்த 5ஜி மொபைல் 2 ரேம் மற்றும் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும். புதிய iQOO 9T 5G மொபைலானது Vivo V1+ இமேஜிங் சிப் உடன் இணைந்து Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC ப்ராசஸரை கொண்டிருக்கும். இந்த  iQoo 9T 5G மொபைலானது சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட iQ00 10-ஐ போலவே உள்ளது.

விலை விவரம்:

iQ00 நிறுவனம் இதுவரை iQOO 9T ஸ்மார்ட் ஃபோன் ஃபிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு டிவைஸ் ஆகும். அதாவது இதன் விலை பிரிவு பிரீமியம் டையர் ரேஞ்சில் இருக்கும். iQ00 9T 5G மொபைலின் விலை இந்தியாவில் ரூ.54,999 முதல் தொடங்கும். இந்த ஸ்மார்ட் ஃபோன் அமேசான் இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் வழியே விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்பெசிஃபிகேஷன்ஸ்: 

iQ00 இந்தியா தகவலின் படி, இந்த மொபைல் குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட் மற்றும் விவோ எக்ஸ்80 ப்ரோவில் பயன்படுத்தப்பட்ட தனி இமேஜிங் சிப்பான Vivo V1+ உடன் வரும்.

BGR இந்தியா வெளியிட்டுள்ளஅறிக்கையின்படி, iQOO 9T மொபைலானது 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஃபுல் -HD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டிருக்கிறது.

இந்த மேல் ஸ்கிரீன் HDR10+ சர்டிஃபிகேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடக்ஷனை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட் போன் 4nm Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC ப்ராசஸருடன் இணைந்து 8GB /12GB LPDDR5 ரேம் மற்றும் 128GB / 256GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் உள்ளது.

Also Read : ஆண்ட்ராய்டு 13 வந்தாச்சு... உங்கள் மொபைலுக்கு டவுன்லோடு செய்வது எப்படி?

இந்த மொபைல் அன்டர்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரை கொண்டிருக்கும். iQ00 9T 5G டீஸர்கள் டிஜிட்டல் ஜூம் என்று கூறப்படும் “20X ஜூம்” உடன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வெளிப்படுத்துகின்றன.

அதாவது இந்த மொபைல் 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட் போன் 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர், 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் 4,700mAh பேட்டரி உள்ளிட்டவற்றுடன் வெளிவந்துள்ளது.

First published:

Tags: Amazon, Smartphone