’ஸ்மார்ட் சட்டை’ மூலம் உடல்நலப் பிரச்னைகளையும் கண்டறியலாம்!

"Hexoskin" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் சட்டை என்னும் மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

’ஸ்மார்ட் சட்டை’ மூலம் உடல்நலப் பிரச்னைகளையும் கண்டறியலாம்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 30, 2019, 8:26 PM IST
  • Share this:
அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ள ‘ஸ்மார்ட் சட்டை’ மூலம் சுவாசக் கோளாறுகளையும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளையும் கூட கண்டறிய முடியும்.

நெதர்லாந்தைச் சேர்ந்த ரட்பெளட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஸ்மார்ட் சட்டையை வடிவமைத்துள்ளனர். மொபைல் ஆப் மூலம் ஸ்மார்ட் சட்டை இணைக்கப்படும். ஆரோக்கியமான மக்கள் தங்களது அன்றாட உடல்நல செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளவும் இந்த ஸ்மார்ட் சட்டை உதவும் எனக் கூறப்படுகிறது.

மருத்துவர் டெனிஸ் மனே கூறுகையில், “ஸ்மார்ட் சட்டைகள் முன்னதாகவே சந்தைகளில் உள்ளன. ஆனால், தொழில் ரீதியாகவும் விளையாட்டு வீரர், வீராங்கணைக்களும் இதைப் பயன்படுத்தத் தொடங்கலாம். நுரையீரல் தொடர்பான அத்தனைத் தகவல்களையும் இந்த ஸ்மார்ட் சட்டை பயனாளருக்கு அளித்துவிடும்” என்கிறார்.


இந்த சட்டையை தற்போது ஆய்வாளர்கள் COPD என்னும் நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அளித்துள்ளனர். சர்வதேச அளவில் சுமார் 64 மில்லியன் மக்கள் COPD பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "Hexoskin" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் சட்டை என்னும் மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க: சர்வதேச வரவேற்பைப் பெற்றும் இந்தியாவுக்கு வராத அமேசான் டெக் சாதனங்கள்!

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் இழந்த முக அழகை குணப்படுத்த முடியுமா?
First published: September 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்