இந்தியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு, கண் நோய்த்தொற்றுகளை விரைவாக பரிசோதிக்க "ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸை" உருவாக்கியுள்ளனர் .
ஆப்பிள் வாட்ச்கள் மூலம் இதய நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும் என்று கண்டுபிடித்த சில வாரங்களில் கண் நோய்த்தொற்றுகளைக் கண்டறிய ஒரு ஸ்மார்ட் சாதனம் வந்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.
கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையானது, அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களிடையே கண் பூஞ்சை நோய்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் அவை பற்றிய ஆராய்ச்சி மிகக் குறைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது கோவிட்-19 தொற்றுக்கு பின் அஸ்பெர்கில்லோசிஸ், மியூகோர்மைகோசிஸ் மற்றும் கேண்டிடீமியா, போன்ற நோய்கள் அதிகரித்ததையும் சுட்டிக்காட்டியது.
இதையும் படிங்க: உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி.. வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்குமாம்..!
இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம், பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள எல்வி பிரசாத் கண் நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் லென்ஸ் சோதனையை செய்துள்ளனர். மக்களிடம் தோன்றும் தடுக்கக்கூடிய குருட்டுத்தன்மைக்கு எதிரான உலகளாவிய முயற்சியில் இது பெரும் சாதனை என்று பாராட்டப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சாதனம் பூஞ்சை கண் தொற்றுகளால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் பார்வை இழப்பு மற்றும் குருட்டுத்தன்மைக்கு நுண்ணுயிர் கெராடிடிஸ் முக்கிய காரணமாகும். இதன் பாதிப்பு இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. இந்த நோயை உரிய நேரத்தில் கண்டறிவது சிரமம். அதே நேரம் அதற்கு அதிக செலவாகும். அனைவராலும் செய்துகொள்ள முடியாது.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிடின் நிரந்தர கண் பார்வை இழக்கும் ஏற்படும். அதனால் தான் இந்த ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய முறையில் கண்ணில் இருந்து சேகரிக்கப்படும் மாதிரியை 2 நாட்கள் வளரச்செய்து ஆய்வு செய்வர். ஆனால் புதிய ஸ்மார்ட் லென்ஸ் மூலம் அதை 1 மணிநேரம் நோயாளிகள் போட்டிருந்தாலே பிரச்சனைகள் கண்டறியப்படும் என்கின்றனர்.
இதையும் படிங்க: 3D அனுபவத்தை தர காத்திருக்கும் பெங்களூரு விமானநிலையம்.. உலகின் முதல் மெட்டாவேர்ஸ் நட்பு ஏர்போர்ட்!
ஆய்வகத்தில் ஆரம்ப சோதனைகள் நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளன. மேலும் நிதி கிடைத்தவுடன் மனித சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று குழு தெரிவித்துள்ளது.
பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஸ்டீபன் ரிம்மர் ,"இரண்டு வகையான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைக் கண்டறியக்கூடிய ஸ்மார்ட் ஹைட்ரஜலை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த ஸ்மார்ட் லென்ஸ், மற்ற காண்டாக்ட் லென்ஸ்கள் தயாரிக்கப்படும் பொருட்களால் ஆனது. அதனால் கண்களுக்கு பாதுகாப்பானதே. இதில் நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் சிக்கி கொள்ளும். அதை வைத்து , பின்னர் பகுப்பாய்வு செய்யலாம்." என்றார்.
அதிக செலவு இல்லாமல் அதே நேரம் அதிக நேரம் எடுக்காமல் விரைவாக நோய்யைக் கண்டறிய இந்த ஸ்மார்ட் சாதனம் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மனித சோதனைகள் முடித்து சந்தைக்கு வர அடுத்த வருடம் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Black Fungus, Eye care, Health