’ஆன்லைன் ஷாப்பிங்-க்கு ஒத்துவராத இந்திய மொபைல் இணையதளங்கள்!

மோசமான மொபைல் இணையதள சேவையால் இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வீழ்ச்சியடையும் என்கிறது ஆய்வு.

Web Desk | news18
Updated: December 24, 2018, 12:31 PM IST
’ஆன்லைன் ஷாப்பிங்-க்கு ஒத்துவராத இந்திய மொபைல் இணையதளங்கள்!
(Representative Image. Reuters)
Web Desk | news18
Updated: December 24, 2018, 12:31 PM IST
ஆசியாவிலேயே வேகம் குறைவான மொபைல் இணையதள சேவையைக் கொண்டது இந்தியா மட்டும்தான் என ஆய்வு ஒன்று கூறுகிறது.

கூகுள் நடத்திய ஆய்வு ஒன்றில் தயாரிப்புகள், இணையதள வடிவமைப்பு, எளிமையான தேடுதல் அம்சம் என அனைத்திலும் இந்திய மொபைல் இணையதளங்கள் சிறப்பாகச் செயல்படுவதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இணையதள வேகம் என்ற ஒரு பிரிவின் கீழ் மட்டும் மிகவும் மோசமான செயல்பாடு கொண்டதாக இந்திய மொபைல் இணையதளங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன.

கூகுள் ஆய்வில் இந்தியாவில் 86 சதவிகித இந்தியர்கள் தங்களது ஷாப்பிங் தேவைகளை மொபைல் மூலமாகவே அதிகம் செய்துகொள்கின்றனர் என அறியப்பட்டுள்ளது.

ஆனால் பொருளாதார சேவைகள், சில்லரை வியாபாரம், வணிகம் என்ற மூன்று பிரிவின் கீழும் மோசமான செயல்பாடுகளைக் கொண்டதாக இந்திய மொபைல் இணையதளங்கள் விமர்சனங்கள் பெற்றுள்ளன.

ஒரு மொபைல் இணையதளம் load ஆவதற்கு சராசரியாக மூன்று விநாடிகள் இருக்கிறதாம். இதானாலேயே இந்திய நுகர்வோரில் 53 சதவிகிதம் பேர் அந்த இணையதளத்தைவிட்டு வெளியேறிவிடுகிறார்களாம். இவ்வாறு வேகம் குறைவாக உள்ளதால் இந்திய ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகம் பெரிதாக அடிபடும் என்றும் கூகுள் ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்து கூகுள் இந்தியாவின் விற்பனைப் பிரிவு இயக்குநர் விகாஸ் அக்னிஹோத்ரி கூறுகையில், “இன்றைய நவின உலகில் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் அளிக்கும் மிகப்பெரும் வர்த்தகத் தளமாக ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளன. இதனால் இந்திய மொபைல் இணையதள சேவைகளின் வேகத்தை அதிகப்படுத்துவது முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.

மொபைல் இணையதள சேவைத்தரம் குறித்து இந்த ஆய்வு 720 இணையதளங்களை அடிப்படையாக வைத்து ஆசிய-பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த 15 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Loading...
மேலும் பார்க்க: தமிழகத்தில் ராமராஜ்ஜியத்திற்கு இடமில்லை - கி.வீரமணி
First published: December 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...