Home /News /technology /

வெளிநாடுகளை போல் சென்னை விமான நிலையத்திலும் பயணிகள் ஓய்வு எடுக்க ‘குட்டி அறைகள்’

வெளிநாடுகளை போல் சென்னை விமான நிலையத்திலும் பயணிகள் ஓய்வு எடுக்க ‘குட்டி அறைகள்’

ஸ்லீப்ஸோ அறைகள்

ஸ்லீப்ஸோ அறைகள்

Bot capsule rooms: மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT)க்குப் பிறகு, சென்னையிலும் இந்த சிறிய ஓய்வு அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
பயணங்களுக்கு இடையே ஏற்படும் காத்திருப்பு சோர்வும் இருக்கே.. அதை நினைத்தாலே பயணத்தின் குதூகலம் குறைந்தே விடும். ரயில் நிலையங்களிலாவது ஓய்வெடுக்க அறைகள் உள்ளது. மணிக்கு இவ்வளவு என்று கொடுத்துவிட்டு உறங்கலாம். ஆனால் விமானநிலையங்களில் நாற்காலிகளில் அமர்ந்துகொண்டே தூங்கவேண்டும்.

கழுத்தும் முதுகும் வலி எடுத்து படுக்கையை கேட்டுக் கெஞ்சும். அதற்கு தற்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஒருவர் மட்டும் படுத்து உறங்கும் வசதி கொண்ட சிறிய அளவிலான கேப்சியூல் படுக்கை வசதி நமது சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம் இப்போது ஸ்லீப்ஸோ எனும் 4 அறைகள் கொண்ட ஸ்லீப்பிங் பாட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT)க்குப் பிறகு, சென்னையில்  இந்த சிறிய ஓய்வு அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்கத்தாவில் வரவிருக்கும் இந்தியப் பிரிவினை அருங்காட்சியகம் !

இந்த யோசனை முதன்முதலில் ஜப்பானில் கொண்டு வரப்பட்டது. அங்கு பயணிகள் அதிக விலை கொடுக்காமல் ரயில் நிலையங்களில் ஓய்வெடுக்க இது உருவாக்கப்பட்டது. விலையும் குறைவு, இடமும் அடக்கமாக இருக்கும் , எல்லா வசதிகளும் உள்ளேயே இருக்கும் என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பாட் அறைகளை சென்னை விமான நிலையத்தில் அறிமுகப்படுத்திய இந்திய விமான நிலைய ஆணையம் தனது ட்வீட்டர் பக்கத்தில், ”இப்போது காத்திருந்து சோர்வடைய வேண்டாம், ஏனெனில் ஃப்ளையர்ஸ் ஸ்லீப்பிங் பாட்ஸில் சிறிது நேரம் தங்கலாம். 'ஸ்லீப்ஸோ', எனும் நான்கு படுக்கை அளவிலான காப்ஸ்யூல்கள் கொண்ட புதிய வசதி உள்நாட்டு விமான நிலையத்தில் தொடங்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்கு மிகவும் பொருத்தமானது.” என்று பதிவிட்டுள்ளது.



பாட் அறைகள்  என்றால் என்ன?

  • இந்த பாட் அறைகள் அளவில் சிறியது . ஆனால் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

  • பயணிகள் தங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு காத்திருக்கும் நேரத்தில் ஓய்வெடுக்க ஏற்றது.

  • பயணிகள் ஒரு மணிநேரத்திற்கு இவ்வளவு கட்டணம் என்ற அடிப்படையில் ஓய்வறை சேவையைப் பயன்படுத்தலாம்.

  • வசதியான படுக்கை, படிக்கும் விளக்குகள், சார்ஜிங் போர்ட்கள், USB சார்ஜர்கள், லக்கேஜ் அறை, சுற்றுப்புற விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

  • ஒரு பெரியவர் மற்றும் 12 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை ஒவ்வொரு காப்ஸ்யூலிலும் தங்க முடியும்.

  • லக்கேஜ் பெல்ட் 1 க்கு அருகில் உள்ள உள்நாட்டு வருகைப் பகுதியில் இந்த வசதியைக் காணலாம்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Chennai Airport

அடுத்த செய்தி