இனி தூங்கிக்கொண்டே ’கேம்’ விளையாடலாம்: அசத்தும் போக்கிமான் ’ஸ்லீப்’!

’ஆன்லைன் கேம் பிரியர்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது போக்கிமான் நிறுவனம்’

Web Desk | news18
Updated: May 29, 2019, 7:25 PM IST
இனி தூங்கிக்கொண்டே ’கேம்’ விளையாடலாம்: அசத்தும் போக்கிமான் ’ஸ்லீப்’!
போக்கிமான் ஸ்லீப்
Web Desk | news18
Updated: May 29, 2019, 7:25 PM IST
’தூங்கிக்கொண்டே விளையாடுங்கள்’ என்ற அடைமொழி உடனே வெளியாகி உள்ளது ஆன்லைன் கேம் ஆன ‘போக்கிமான் ஸ்லீப்’.

கடந்த 2016-ம் ஆண்டு போக்கிமான் கோ அறிமுகமான போது ஒட்டுமொத்த உலகமே போக்கிமான் உடன் சாலையெங்கும் ஆன்லைன் கேம்-ல் மூழ்கி பின் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்தமுறை போக்கிமான் நிறுவனம் புதிதாக ஒரு ஆப் கேம் ஒன்றை அறிமிகம் செய்துள்ளது. போக்கிமான் ஸ்லீம் என்னும் புது கேம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் கேம் உங்களது தூக்கமுறையை பின்பற்றுகிறது. உங்கள் தூக்க அளவுடன் ஒப்பிட்டு நீங்கள் போக்கிமான்களை சேகரிப்பது போலவும் அதன் மூலம் உங்கள் போக்கிமான் வளர்வது போலவும் அதை நீங்கள் பயிற்றுவிப்பது போலவும் இந்த கேம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.


ஆன்லைன் கேம் விளையாடி தூக்கத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள் என்ற விமர்சனத்தை முறியடிக்கும் விதமாக ஆன்லைன் கேம் பிரியர்களையும் ஆரோக்கியமான தூக்க நடைமுறைக்கு பழக்குகிறது போக்கிமான் ஸ்லீப். ’ஆன்லைன் கேம் பிரியர்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது போக்கிமான் நிறுவனம்’ என அந்நிறுவனம் தனது புதிய கேம்-ஐ விளம்பரப்படுத்தி உள்ளது.

மேலும் பார்க்க: ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கிடைக்க ஹேக்கர் ஆன சிறுவன்..!
First published: May 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...