ஜியோவின் பங்குகளை வாங்கிய சில்வர் லேக் - தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன...?

மக்களிடையே புழங்கும் தொழில்நுட்பத்தை சர்வதேச தரத்திற்க்கு மேம்படுத்த முடியும். 

ஜியோவின் பங்குகளை வாங்கிய சில்வர் லேக் - தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன...?
ரிலையன்ஸ் ஜியோ
  • News18
  • Last Updated: May 4, 2020, 11:59 AM IST
  • Share this:
அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் 9.9 சதவிகித பங்குகளை வாங்கியது. இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு சந்தையில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேந்த சில்வர் லேக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த முதலீட்டின் படி ஜியோ தளத்தின் மொத்த பங்கு மதிப்பு 4.90 லட்சம் கோடி ரூபாயும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


“அனைத்து இந்தியர்களின் நலனுக்காக இந்திய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்ப்பதற்கும் மாற்றுவதற்கும் சில்வர் லேக்கை மதிப்புமிக்க பங்களிப்பாளராக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றில் சில்வர் லேக் மிகவும் மதிக்கப்படும் குரல்களில் ஒன்றாகும். இந்தியன் டிஜிட்டல் சமூகத்தின் மாற்றத்திற்காக  அவர்களின் உலகளாவிய தொழில்நுட்ப உறவுகளின் நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் முதலீட்டை அடுத்து, சில்வர் லேக் நிறுவனமும் முதலீடு செய்திருப்பது வணிக உலகில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், குறுகிய காலத்தில் ஜியோ நிறுவனம் தனது சந்தை மதிப்பை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.இந்தியாவின் டிஜிட்டல் சமூககத்தில் சில்வர் லேக் நிறுவனம் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களை இணைத்துக்கொள்ளும் போதும் பல வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், சில்வர் லேக் போன்ற முன்னணி நிறுவனங்களின் கூட்டணி மூலம், ஜியோ உருவாக்கிய சேவைகளின் தரத்தை மேம்படுத்தி அதிக மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும். மேலும், மக்களிடையே புழங்கும் தொழில்நுட்பத்தை சர்வதேச தரத்திற்க்கு மேம்படுத்த முடியும்.

அமெரிக்காவை மையமாகக் கொண்ட சில்வர் லேக் நிறுவனம், ஆல்பபெட், வெய்போ, ட்விட்டர், அலிபாபா உள்ளிட்ட முன்னணி சர்வதேச நிறுவனங்களில் சுமார் 40 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீட்டைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading