இஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா?

சந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய நிகழ்வான நிலவ வட்டப்பாதைக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கையில் இஸ்ரோ இன்று ஈடுபட உள்ளது.

இஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா?
சந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய நிகழ்வான நிலவ வட்டப்பாதைக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கையில் இஸ்ரோ இன்று ஈடுபட உள்ளது.
  • News18
  • Last Updated: September 6, 2019, 6:25 PM IST
  • Share this:
நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, சந்திரயான் 2 விண்கலம், கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது.


ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற சந்திரயான்-2 கடந்த ஆகஸ்ட்  14ம்- தேதி அதிகாலை 2.21 மணிக்கு 5-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தது.


சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இதற்காக சந்திராயனின் திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் இயக்கப்பட உள்ளது என்றும் இது மிகவும் சவாலான நகர்வு என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இதன் பின்னர், ஆகஸ்ட் 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில், விண்கலத்தின் திசையானது நான்கு முறை மாற்றியமைக்கப்படும். அதன்பின்னர், நிலவின் கடைசி சுற்றுவட்டப்பாதையை சந்திரயான் 2 விண்கலம் அடையும்.
தொடர்ந்து, செப்டம்பர்  2-ம் தேதி, விக்ரம் லேண்டர் எனப்படும் தரையிறங்கும் சாதனம், சந்திரயான்-2 வில் இருந்து பிரிந்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும்.


விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக, செப்டம்பர் 7-ம் தேதி, நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading