சிக்னல் செயலியில் புதிய மாற்றம் - அப்டேட் வெர்சன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த வசதி!

சிக்னல் செயலியில் புதிய மாற்றம் - அப்டேட் வெர்சன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த வசதி!

சிக்னல் ஆப்

புதிய குரூப் ஒன்றை உருவாக்கி அதில் ஆயிரம் பேர் வரை சேர்த்துக்கொள்ளும் வசதியை சிக்னல் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிக்னல் செயலியை அப்டேட் செய்திருப்பவர்கள் புதிய குரூப் ஒன்றை உருவாக்கி ஆயிரம் பேர் வரை அதில் சேர்த்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் பிரவைசி பாலிசிக்கு கடுமையாக எதிர்ப்பு எழுந்ததால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் யூசர்களின் பார்வை சிக்னல் செயலி மீது திரும்பியது. லட்சகணக்கானோர் வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், கூகுள் பிளே ஸ்டோர் உள்ளிட்ட ஆப் டவுன்லோட் செயலிகளில், வாட்ஸ் ஆப் செயலியின் பதிவிறக்கம் வெகுவாக குறைந்தது. வாட்ஸ் ஆப் செயலியில் இருக்கும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும் சிக்னல் செயலி, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அம்சங்களையும், அப்டேட்களையும் செய்து வருகிறது.

அந்த வகையில், புதிய குரூப் ஒன்றை உருவாக்கி அதில் ஆயிரம் பேர் வரை சேர்த்துக்கொள்ளும் வசதியை சிக்னல் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய வெர்சன்களில் சிக்னல் செயலிலை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் கிடைக்காது. புதிதாக வெர்சனை டவுன்லோடு செய்து அப்டேட் செய்த யூசர்கள் மட்டும் புதிய வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும். புதிதாக உருவாக்கப்படும் குரூப்பில் குரூப் அட்மின் கன்ட்ரோல் அம்சங்கள் உள்ளன. மேலும், டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகளில் உள்ளதுபோல் லிங் அல்லது QR Code மூலம் புதிய யூசர்களை குரூப்பில் இணைத்துக்கொள்ளலாம்.

குரூப்பில் உள்ள தகவல்களை எடிட் செய்தல், சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட அதிகாரங்கள் குரூப்பில் உள்ள நபர்களுக்கு, குரூப் அட்மின் முடிவு செய்து கொடுக்கலாம். சிக்னல் செயலியில் புதிய குரூப்பை உருவாக்குவது குறித்து வழிக்காட்டல் தேவை என நினைப்பவர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி புதிய குரூப்பை உருவாக்கலாம்.

Also read... யூசர் டேட்டாவை டிராக் செய்வது ஏன்? கூகுளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!

அன்டிராய்டு செல்போனை உபயோகப்படுத்துபவர்கள், சிக்னல் செயலியில் கம்போஸ் நியூ குரூப் (compose the New group) ஆப்சனை தேர்தெடுங்கள். அப்போது, உங்கள் திரையில் சேமித்து வைத்துள்ள தொடர்புகள் காண்பிக்கப்படும். உங்கள் விருப்பம்போல் எத்தனை நபர்கள் குரூப்பில் இருக்கலாம் என்பதை தீர்மானித்துவிடுங்கள். அதிகபட்சமாக ஆயிரம் பேர் வரை புதிதாக உருவாக்கப்படும் குரூப்பில் இணைத்துக்கொள்ளலாம். பின்னர், குரூப் பெயரை பதிவிட்டு, புதிய குரூப்பை உருவாக்கி விடுங்கள். குரூப்பில் இணைத்த நபர்களுக்கு தற்போது மெசேஜ் சென்றிருக்கும். விருப்பப்பட்டால் அவர்கள் தொடரலாம். வேறொரு செயலியில் இருக்கும் குரூப்பை அப்படியே சிக்னல் செயலிக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. குரூப்பின் அழைப்பை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும் நீங்கள் உருவாக்கிய குரூப்பில் மெசேஜ் செய்ய முடியும்.

மற்றொரு செயலியில் (உதாரணமாக வாட்ஸ் ஆப்) இருக்கும் குரூப்பை சிக்னல் செயலிக்கு மாற்றுகிறீர்கள் என்றால், சிக்னல் குரூப் செட்டிங்ஸ்-ல் சென்று அதற்கான லிங்க் இருக்கும். அதனை காபி(Copy) செய்து உங்கள் மற்ற செயலி குரூப்பில் உள்ளவர்களுக்கு அனுப்பலாம். அதற்கு முன்னர் உங்களிடம் பிரவைசி தொடர்பான எச்சரிக்கை கொடுக்கப்படும். நீங்கள் சம்மதம் தெரிவித்தால், உங்களின் சிக்னல் குரூப்பின் லிங்க் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட மற்ற செயலிகளுக்கு அனுப்பலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: