Home » News » Technology » SIGNAL IS ABOUT TO GET MORE MONEY TO MAKE THE WHATSAPP RIVAL BETTER THANKS TO ELON MUSK VIN GHTA

Signal app பயன்படுத்துமாறு Paytm நிறுவனர் பரிந்துரை - பெருகும் ஆதரவால் ஆப் பதிவிறக்கம் அதிகரிப்பு!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் சிஇஓ -க்கள் அடுத்தடுத்து வாட்ஸ் ஆப் -க்கு எதிராகவும், சிக்னல் செயலிக்கு ஆதரவாகவும் தெரிவித்த கருத்துகள் பயனாளர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Signal app பயன்படுத்துமாறு Paytm நிறுவனர் பரிந்துரை - பெருகும் ஆதரவால் ஆப் பதிவிறக்கம் அதிகரிப்பு!
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் சிஇஓ -க்கள் அடுத்தடுத்து வாட்ஸ் ஆப் -க்கு எதிராகவும், சிக்னல் செயலிக்கு ஆதரவாகவும் தெரிவித்த கருத்துகள் பயனாளர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • News18
  • Last Updated: January 12, 2021, 1:29 PM IST
  • Share this:
WhatsApp-ன் பிரைவசி அப்டேட் தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் முதல் Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மா வரை பல முன்னணி நிறுவனத்தின் தலைவர்களும் Signal app - ஐ பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

முன்னணி மெசேஜிங் செயலியாக இருக்கும் வாட்ஸ் ஆப் ( Whats app) தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. பேஸ்புக்குக்கு சொந்தமான இந்த செயலி, பிரைவசி கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. அதன்படி, புதிய பிரைவசி பாலிசியை அப்டேட் செய்யுமாறு பயனாளர்களை கேட்டுக்கொண்டதுடன், அப்டேட் செய்யாத பயனாளர்கள் WhatsApp - ஐ பிப்ரவரி 8ம் தேதிக்குப் பிறகு பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளது. இது Whatsapp பயனாளர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் பயனாளர்களின் தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக டெக் உலகினர் கூறி வருகின்றனர். End To End என்கிரிப்ஷன் தொடர்ந்தாலும், மற்ற தகவல்களை பேஸ்புக் எப்படி கையாளும் என அனைவருக்கும் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, முகநூல் நிறுவனம் தனிநபர் தகவல்களை திருடியதாக மிக்கபெரிய சர்ச்சை ஏற்பட்டது. டெக் ஜாம்பவான்கள் பலரும் மார்க் சூக்கர்பெர்க், தனிநபர் தகவல்களை திருடுவதாகவும் குற்றம்சாட்டினர்.


இதற்கு வலுசேர்க்கும் விதமாக அண்மையில் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் (Elon Musk), 'Use Signal' என டிவீட் செய்தார். அதேபோல், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பின் உளவு வேலைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்திய எட்வர்டு ஸ்னோடனும், சிக்னல் செயலியை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளார். தற்போது ரஷ்யாவில் இருக்கும் அவர், தானும் சிக்னல் செயலியை தான் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதேபோல், பேடிஎம் (Paytm) நிறுவனரான விஜய் சேகர் சர்மாவும் (Vijay Shekhar Sharma) சிக்னல் செயலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 

அண்மையில் கூகுளுடன் டிவிட்டரில் மல்லுக்கட்டிய அவர், தனிநபர் பாதுகாப்பு காரணங்களுக்காக Singnal App -ஐ பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். "பலிகடாவாக மாறுவதும், ஆபத்தான வலையில் இருந்து வெளியேறுவதும் நம்மிடமே இருக்கிறது" விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார். இதேபோல், Hike CEO பார்திமிட்டலும் பாதுகாப்பான சேவைகளுக்கு சிக்னல் மற்றும் டெலிகிராம் (Signal and Telegram) செயலிகளை பயன்படுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.

Also read... WhatsApp ஆப்பிற்கு மாற்றாக Signal ஆப் - திடீரென பிரபலம் ஆவது ஏன் தெரியுமா?உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் சிஇஓ -க்கள் அடுத்தடுத்து வாட்ஸ் ஆப் -க்கு எதிராகவும், சிக்னல் செயலிக்கு ஆதரவாகவும் தெரிவித்த கருத்துகள் பயனாளர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றான செயலியை தேடிய இணையவாசிகள், அதிகளவு சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ் ஆப் செயலியை பின்னுக்குத் தள்ளி, சிக்னல் செயலி அதிக பதிவிறக்கம் செய்த செயலியாக உருவெடுத்துள்ளது. 

தனிநபர் தகவல் பாதுகாப்பு, இலவச சேவை ஆகிய காரணங்களால் பயனாளர்கள் சிக்னல் செயலியை டவுன்லோடு செய்து வருகின்றனர். இதேபோல், டெலிகிராம் செயலியின் பதிவிறக்கமும் அதிகரித்துள்ளது. Space X CEO எலான் மஸ்க், சிக்னல் செயலிக்கு ஆதரவாக டிவிட்டரில் தெரிவித்த கருத்துக்குப்பிறகு, சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை 11,708 % அதிகரித்துள்ளது. குறிப்பாக, உலகளவில், வாட்ஸ் ஆப்-க்கு மாற்றாக சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளது தெரியவந்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading