Signal App -ல் இந்த பாதுகாப்பு வசதியை கவனிச்சீங்களா? உடனே ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்!

சிக்னல் செயலி

வாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக களமிறங்கியுள்ள சிக்னல் செயலி, யூசர்களுக்கு ஸ்கிரீன் செக்யூரிட்டி பாதுகாப்பையும் வழங்குகிறது.

  • Share this:
பிரைவசி பாலிசி அப்டேட் காரணமாக வாட்ஸ் ஆப் கடும் சர்ச்சைக்குள்ளானது. உலகளவில் கடும் எதிர்ப்பை பதிவு செய்த யூசர்கள், அந்த செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். பிரைவசி பாலிசி தொடர்பாக வாட்ஸ் ஆப் வெளியிட்ட விளக்கத்தையும் யூசர்கள் நம்பவில்லை.

இதனால், நாளுக்குநாள் சிக்னல் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிக்னல் செயலியும் யூசர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுத்துள்ளது. யூசர்களின் செல்போன் எண்களை தவிர வேறு எந்த தகவலையும் சிக்னல் செயலி கேட்பதில்லை.

வாட்ஸ் ஆப்- ன் பிரைவசி பாலிசியுடன் ஒப்பிடும்போதும், சிக்னல் செயலியின் பிரைவசி பாலிசி தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாக யூசர்கள் கூறி வருகின்றனர். ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும் எட்வர் ஸ்டோடன் முதல் உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் வரை மிகப்பெரிய டெக் ஜாம்பவான்கள் சிக்னல் செயலியை பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ALSO READ | மீடியா துறையில் இருக்கும் நபரை திருமணம் செய்யலாமா..? பல பேரை சந்திப்பதால் நீங்கள் அவருக்கு ஸ்பெஷலாக தெரிவீர்களா..?

வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றாக நீங்கள் சிக்னல் செயலியை பயன்படுத்துபவராக இருந்தால், அற்புதமான ஒரு பாதுகாப்பு செட்டிங்ஸை சிக்னல் செயலி வழங்கியிருக்கிறது. அதாவது, சிக்னல் ஸ்கீரின் செக்யூரிட்டி ஆப்சனை கொடுத்திருக்கிறது.

இந்த ஆப்சன் மூலம் மூன்றாவது நபர் ஒருவர் உங்களின் தனிபட்ட தகவல்களை பார்க்கவோ, ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ முடியாது. இந்த செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்தால், மூன்றாவது நபர் உங்களின் சிக்னல் செயலியை உங்கள் தொலைபேசியில் உங்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த முடியாது. இந்த ஆப்சன் ஏற்கனவே ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன்களில் (Apple iPhone) பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த செட்டிங்ஸ் பற்றிய தகவல்கள் பெரும்பாலானோர் தெரிந்திருக்கவில்லை.

இந்த ஆப்சனை உங்கள் சிக்னல் செயலியில் நீங்கள் ஆக்டிவேட் செய்ய விரும்பினால், சிக்னல் செயலியில் இருக்கும் உங்கள் புரொபைல் பகுதிக்கு செல்லுங்கள். அங்கு invite friends, மற்றும் தோற்றம் (appearance), பிரைவசி (privacy), நோட்டிபிகேசன் (notifications) உள்ளிட்ட ஆப்சன்கள் இருக்கும். அதில், பிரைவசி ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.

ALSO READ | உங்கள் துணையிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாத ரகசியங்கள்!

அங்கு, எனேபிள் ஸ்கிரீன் செக்யூரிட்டி (Enable Screen Security) என்ற ஆப்சன் இருக்கும். அதனை ஆன் செய்தீர்கள் என்றால், மூன்றாவது நபரின் கைகளுக்கு உங்கள் செல்போன் செல்லும்போது, சிக்னல் செயிலியின் பயன்பாட்டை பார்க்க முடியாது. ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆன்டிராய்டு யூசர்கள் இருவரும் இதே வழிமுறைகளை பின்பற்றி இந்த செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்யலாம்.
Published by:Sankaravadivoo G
First published: