HOME»NEWS»TECHNOLOGY»signal gets a big update for the apple iphone everything iphone and android users need to know vin ghta

ஐபோன் யூசர்களுக்கு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ள 'Signal' ஆப்!

உங்கள் தொலைபேசி காண்டாக்ட்டுகளில் அமைக்கப்பட்ட சிஸ்டம் ப்ரொபைல் போட்டோக்களைத் தேர்வு செய்தல் அல்லது உங்கள் காண்டாக்ட்டில் உள்ள நபர்கள் வைத்துள்ள சமீபத்திய சிக்னல் ப்ரொபைல் பிக்ச்சரை தேர்வு செய்தல் போன்ற விருப்பத்துடன் வருகிறது.

ஐபோன் யூசர்களுக்கு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ள 'Signal' ஆப்!
உங்கள் தொலைபேசி காண்டாக்ட்டுகளில் அமைக்கப்பட்ட சிஸ்டம் ப்ரொபைல் போட்டோக்களைத் தேர்வு செய்தல் அல்லது உங்கள் காண்டாக்ட்டில் உள்ள நபர்கள் வைத்துள்ள சமீபத்திய சிக்னல் ப்ரொபைல் பிக்ச்சரை தேர்வு செய்தல் போன்ற விருப்பத்துடன் வருகிறது.
  • News18
  • Last Updated :
  • Share this:

வாட்ஸ்அப் (Whatsapp) செயலியின் பிரைவசி செட்டிங்ஸ் அறிவிப்புக்கு பிறகு, உலகளவில் சிக்னல் (Signal) செயலியின் பயன்பாடு கணிசமான எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. தற்போது, பிரைவசியை மையமாக கொண்ட இந்த மெசேஜிங் ஆப், ஆப்பிள் ஐபோனில் (Apple Iphone) அதன் iOS வெர்சனுக்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

சிக்னல் வெர்சன் 5.2.1 என்ற புதிய அப்டேட் யூசர்களுக்கு டஜன் கணக்கில் புதிய மாற்றங்களைப் வழங்குகிறது. இதில் புதிய அம்சங்கள், செயல்பாடு மற்றும் செயலியின் மேம்படுத்த டீவீக்ஸ் போன்ற விஷயங்கள் அடங்கியுள்ளன. கூடுதல் சிறப்பாக, இந்த அப்டேட் மூலம் குரூப் கால்களில் அதிக பங்கேற்பாளர்களை சேர்க்க முடியும். 

மேலும் ஒரே நேரத்தில் பல காண்டாக்குகளுக்கு சிக்னல் ஆப் மூலம்  மேம்படுத்தப்பட்ட பகிர்வு மற்றும் வீடியோ தரம் மற்றும் அதன் அளவு மேம்பாடுகள் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. ஐபோனுக்கான சிக்னல் வெர்சன் 5.2 வெளியிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த புதுப்பிப்பு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இது பல மேம்படுத்தல்கள் மற்றும் பிழை திருத்தங்களுடன் வருகிறது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சிக்னல் மிகவும் பிரபலமான ஆப்பாக உள்ளது. மேலும் பல நாடுகளில் கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த பிரபலமான ஆப்பாக உள்ளது. 



பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையானது, யூசர்களின் டேட்டா எவ்வாறு கையாளப்படுகிறது மற்றும் பகிரப்படுகிறது என்ற அச்சத்தை உருவாக்கிய பின்னர், அதற்கு மாற்று செயலியை மக்கள் தேடி வந்த நிலையில் சிக்னல் ஆப் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆப்பிள் ஐபோனுக்கான சிக்னல் அப்டேட் சேஞ்ச்லாக் மூலம் செயலியில் இப்போது மீடியா பைலை பதிவிறக்கம் செய்யும் விருப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை சேர்த்துள்ளது. சிக்னல் ஆப்பில் உள்ள செட்டிங்ஸ் -> டேட்டா (Settings -> Data) என்ற மெனுவில் சென்று இதனை சரிசெய்து கொள்ளலாம். அதேபோல, முன்னதாக குரூப் கால்களில் 5 பேர் பங்கேற்கும்படி இருந்தது. 

இந்த நிலையில் இப்போது 8 பங்கேற்பாளர்களை சேர்க்கலாம் என்றும் சிக்னல் டெவலப்பர்கள் கூறியுள்ளனர். வேறொரு செயலியில் இருந்து எதையாவது பகிர விரும்பினால், இப்போது ஒரே நேரத்தில் யூசர்கள் பல சாட்கள் அல்லது காண்டாக்டுகளுக்கு அனுப்பலாம். நீங்கள் ஒரு புதிய குரூப்-ஐ உருவாக்கும் போது ஷேர் செய்யக்கூடிய குரூப் லிங்கை இயக்குவதற்கான ஆப்ஷனல் ஷார்ட்கட்டும் இப்போது இருக்கிறது. ஐபோனுக்கான புதிய சிக்னல் அப்டேட் ஆப்பிலேயே அட்டாச்மென்ட்டுகளை திறக்கும் திறனையும் சேர்த்துள்ளது. சிக்னல் பயன்பாட்டில் உங்கள் காண்டாக்டுகளின் ப்ரொபைல் பிச்சர்களையும் எவ்வாறு காண்பிக்கப்பட்ட வேண்டும் என்பதற்கான மாற்றங்களும் உள்ளன.

Also read... ஏர்டெல் வெளியிட்டுள்ள புதிய "Data add-on plans": ரூ.78-ல் ஆரம்பமாகும் டேட்டா பேக் விவரங்கள்!

ஐபோன் மற்றும் ஐபாட் பயனர்களுக்கு, iOS 14 ஐப் பயன்படுத்தும் போது WebP படங்கள் சாட்டில் சரியாக மாற்றப்படாமல் இருப்பதற்கான சிக்கலை இப்போது தீர்க்கிறது. இது தவிர, Android தொலைபேசி பயனர்களுக்கு, சிக்னல் தற்போது வெர்சன் 5.2.3-ல் உள்ளது மற்றும் ஆப்பின் கடைசி அப்டேட், புதிய செயல்பாடு மற்றும் பிழை திருத்தங்களைச் சேர்த்துள்ளது. அதேபோல, ஸ்டேட்டஸ் பாரில் சில மேம்பாடுகளை சேர்த்துள்ளது. அவை உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டுமே தோன்றும். 

உங்கள் தொலைபேசி காண்டாக்ட்டுகளில் அமைக்கப்பட்ட சிஸ்டம் ப்ரொபைல் போட்டோக்களைத் தேர்வு செய்தல் அல்லது உங்கள் காண்டாக்ட்டில் உள்ள நபர்கள் வைத்துள்ள சமீபத்திய சிக்னல் ப்ரொபைல் பிக்ச்சரை தேர்வு செய்தல் போன்ற விருப்பத்துடன் வருகிறது. வீடியோ அழைப்பில், மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்ப்பார்கள் என்பதற்கான முழுத் திரை காட்சியைப் பெற உங்கள் முகத்தில் டாப் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். Android-க்கான சிக்னல் அப்டேட் கால்களின் போது குறைந்த தரவு பயன்பாட்டிற்கான அமைப்பையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: