முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இனி படங்களை தேடவேண்டாம்... கதையை சொன்னால் போதும்... செயற்கை நுண்ணறிவே படத்தை உருவாக்கும்!

இனி படங்களை தேடவேண்டாம்... கதையை சொன்னால் போதும்... செயற்கை நுண்ணறிவே படத்தை உருவாக்கும்!

செயற்கை நுண்ணறிவே படத்தை உருவாக்கும்!

செயற்கை நுண்ணறிவே படத்தை உருவாக்கும்!

மக்கள்  குறிப்பிடும் அளவுகோல்களின் அடிப்படையில் உடனடியாக படங்களை உருவாக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

பிரபல புகைப்பட நிறுவனமான Shutterstock தனது புதிய செயற்கை நுண்ணறிவு - AI இமேஜ் ஜெனரேஷன் தளத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.  உலகளவில் உள்ள அனைத்து ஷட்டர்ஸ்டாக் வாடிக்கையாளர்களும் தங்களது சொந்த  மொழியில்  பயன்படுத்த ஏற்றதாக அது அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

கட்டுரை எழுதுபவர்கள், கவிதை எழுதுபவர்கள்  அதற்கு ஏற்ற சரியான புகைப்படம் வேண்டும் என்றால் அதை பெரும்பாலும் ஷட்டர்ஸ்டாக் இணையதளத்தில் தான் தேடுவார்கள். எந்த சூழலுக்கும், எந்த மனநிலையும் , செயலையும் படங்கள் அதில்  கிடைக்கும். கோடிக்கணக்கான படங்களின் தொகுப்பாக ஷட்டர்ஸ்டாக் இணையதளம் இருந்து வருகிறது.

ஷட்டர்ஸ்டாக் இணையதளம் கடந்த இரண்டு வருடங்களாக OpenAI, Meta மற்றும் LG AI ரிசர்ச் போன்ற முக்கிய தொழில் நிறுவனங்களுடன் தங்களின் AI ஆராய்ச்சிக்காக மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்கி வேலை செய்தது.

இதையும் படிங்க: சுழற்சியை நிறுத்தி எதிர்திசையில் சுழலும் பூமி உட்கரு.... என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

அதோடு கடந்த ஆண்டு அக்டோபரில், Shutterstock OpenAI உடனான தனது கூட்டாண்மையை விரிவுபடுத்தியது. கலைஞர்களின் பங்களிப்புகளுக்கு ஈடுசெய்ய ஒரு தனி அமைப்பைத்  தொடங்கியது. மேலும் AI-உருவாக்கிய உள்ளடக்கம் தொடர்பான நுண்ணறிவுகளைச் சேகரித்து வெளியிடுவதில் அதன் R&D இயந்திரத்தை மையப்படுத்தியது.

உலகெங்கிலும் உள்ள ஷட்டர்ஸ்டாக் பார்வையாளர்களுக்கு OpenAI இன் தடையற்ற பட உருவாக்க திறன்களை அறிமுகப்படுத்துவதே இந்த புதிய  AI இமேஜ் ஜெனரேஷன் தளத்தின் நோக்கமாகும். மக்கள்  குறிப்பிடும் அளவுகோல்களின் அடிப்படையில் உடனடியாக படங்களை உருவாக்க அனுமதிக்க இருக்கிறது.

"எங்களது இந்த புதிய மக்கள் AI  இமேஜிங் தளம் மக்களின்  கதை சொல்லும் விதத்தை மாற்றும். ஒரு நல்ல படத்தை உருவாக்க நீங்கள் இனி ஒரு வடிவமைப்பு நிபுணராக மாறவேண்டியதில்லை அல்லது  ஒரு படைப்பாற்றல் குழுவை அணுக வேண்டியதில்லை. உங்கள் தேவைகளை சொன்னால் செயற்கை நுண்ணறிவே புதிய படங்களை உருவாக்கி தரும் "  என்று ஷட்டர்ஸ்டாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஹென்னெஸ்ஸி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

First published:

Tags: Artificial Intelligence