Home /News /technology /

ட்ரோன் விதிகள் 2021: மருத்துவம், விவாசாயம் என உலகளாவிய ட்ரோன் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் இந்தியா!

ட்ரோன் விதிகள் 2021: மருத்துவம், விவாசாயம் என உலகளாவிய ட்ரோன் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் இந்தியா!

ட்ரோன்

ட்ரோன்

வணிக பயன்பாடு இல்லாத சிறிய ரக ட்ரோன்களுக்கு எந்தவித அனுமதியும் தேவையில்லை. இதுவரை 300 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்துசெல்ல அளிக்கப்பட்ட அனுமதி, தற்போது 500 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
ட்ரோன்களை இயக்குவதற்கான விதிமுறைகளை கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்திய மத்திய அரசு, தற்போது பல்வேறு தளர்வுகள் அளித்து அந்த விதிமுறைகளை எளிதாகியுள்ளது. இதன் மூலம் ட்ரோன் விதிகள் 2021-ல் வான்வழிச் சான்றிதழ், தனித்துவமான அடையாள எண், முன் அனுமதி மற்றும் ட்ரோன்களின் ஆராய்ச்சி மற்ரும் மேம்பாட்டில் (R&D) ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தொலைநிலை பைலட் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் நீக்கப்பட்டு விட்டது.

இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதிய ட்ரோன் விதிகளின்படி, இதுவரை இருந்து வந்த ட்ரோனுக்கான தனித்துவமான அடையாள எண்ணுக்கான ஒப்புதலுக்கு இனி காத்திருக்க தேவையில்லை. புதிய ட்ரோன்களின் ஒப்புதலுக்கு இதற்கு முன்பு 25 படிவங்கள் நிரப்பவேண்டி இருந்தது, தற்போது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வணிக ரீதியிலான ட்ரோன்களுக்கான, 10 ஆண்டுகள் ரிமோட் பைலட் உரிமத் தொகை 3 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்ரோன்கள் எங்கெல்லாம் இயக்க அனுமதிக்கலாம் என புதிய டிஜிட்டல் வான்தளம் அடுத்த 30 நாட்களில் வெளியிடப்பட உள்ளது. பச்சை மண்டலங்களாக வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் 400 அடி உயரம் வரை ட்ரோன்களை இயக்க எந்த அனுமதியும் தேவையில்லை. மஞ்சள் நிறமாக வகைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விமானநிலைய சுற்றுவட்டாரங்களில் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு வெளியே ட்ரோன்களை இயக்கிக்கொள்ளலாம்.

வணிக பயன்பாடு இல்லாத சிறிய ரக ட்ரோன்களுக்கு எந்தவித அனுமதியும் தேவையில்லை. இதுவரை 300 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்துசெல்ல அளிக்கப்பட்ட அனுமதி, தற்போது 500 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் ட்ரோன்கள் இயக்க தடைகள் இல்லை. மேலும், சரக்கு கையாள்வதற்கென பிரத்யேக ட்ரோன் வழித்தடமும் வடிவமைக்கப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஐடி கான்பூரின் இயக்குனர் அபய் கரந்திகர் கூறியதாவது, "விவசாயம், சுரங்கம், உள்கட்டமைப்பு, கண்காணிப்பு, அவசரகால பதில், போக்குவரத்து, புவி -இடவியல் வரைபடம், பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் என கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் இந்த விதிகள் மூலம் பொருளாதாரத்தில் பெரிய நன்மைகளை பெரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று கூறியுள்ளார். இதையடுத்து, ட்ரோன் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, "இந்திய ட்ரோன் தொழில்துறையை புதிய உயரத்திற்குத் தள்ள இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை" என்று தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மேலும், இந்திய UAV ட்ரோன் சந்தை 2026 ஆம் ஆண்டில் $ 1.8 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த கோடையில் ஆராய்ச்சி நிறுவனமான ரிசர்ச்ஆண்ட்மார்க்கெட்ஸ் வெளியிட்ட எண்களின்படி, ஆண்டு வளர்ச்சி 14.61% ஆக இருக்கும். இந்த மாத தொடக்கத்தில், பெங்களூருவில் மருந்துகளை டெலிவரி செய்வதற்கான பியூண்ட் விஷுவல் லைன் ஆஃப் சைட் (பிவிஎல்ஓஎஸ்) ட்ரோன் சோதனை ஓட்டம், த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் (TAS) மற்றும் UDAN (உதே தேஷ் கா ஆம் நாகிரிக்) பைலட் மூலம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பெங்களூருவின் புறநகரில் உள்ள கவுரிபிதானூரில் 15 கிமீ சுற்றளவில் இந்த சோதனை ஓட்டம் நிறைவடைவதை உறுதி செய்தது.

இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மெட்காப்டர் எக்ஸ் 4 மற்றும் மெட்காப்டர் எக்ஸ் 8 ஆகும். இவை பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்திய ட்ரோன் நிறுவனமான த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸால் உருவாக்கப்பட்டது. வெளியான புள்ளிவிவரங்களின்படி, இது சராசரியாக 7 நிமிடங்களில் 3.5 கிமீ தூரம் பறக்கும் நேரத்தை உள்ளடக்கியது. இந்த இரண்டு வெவ்வேறு பேலோட்களும் அதிகபட்சமாக 2 கிலோ வரை சோதிக்கப்பட்டன.

மெட்காப்டர் எக்ஸ் 4 சுமார் 3.5 கிலோ எடை கொண்டது மற்றும் 1 கிலோ வரை பேலோட்களை வைத்திருக்க முடியும். அதே நேரத்தில் மெட்காப்டர் எக்ஸ் 8, 5.5 கிலோ எடையுள்ளதாகவும், 2 கிலோ வரை பேலோடுகளை வைத்திருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய விதிகளின்படி, இந்த இரண்டு ட்ரோன்களும் சிறிய ஆளில்லா விமான அமைப்பு என வகைப்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also read... ஸ்மார்ட்போன்கள் எளிதில் தீப்பிடிப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கிறது - என்னென்ன தெரியுமா?

முன்னதாக நியூஸ் 18-உடனான உரையாடலில், விங் கமாண்டர் எஸ் விஜய் (மூத்த அதிகாரி) கூறியதாவது, சுகாதார மற்றும் மருத்துவ விநியோகங்களில் ட்ரோன்களின் பயன்பாட்டிலிருந்து சில அற்புதமான சாத்தியமான பயன்பாடுகள் வருகின்றன. ட்ரோன்கள் இரத்தம், சீரம், வைரஸ் கலாச்சாரம், தடுப்பூசிகள் மற்றும் உறுப்புகள் போன்ற உயிரியல்களை மிக வேகமாக மற்றும் பாதுகாப்பான முறையில் வழங்கும். இது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவும்.

மருத்துவம் போன்ற அவசர தேவையில் மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பதிலாக நிமிடங்களில் தொகுப்புகளை பெரும் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது," என்று அவர் கூறியிருந்தார். ஜான் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் தலைமையிலான ஒரு ஆராய்ச்சி அறிக்கையில், மருத்துவத் துறையில் ட்ரோன்கள் தடுப்பூசி விகிதங்களை மேம்படுத்தவும் மற்றும் உலகளவில் நடத்தப்படும் பல்வேறு நோய்த்தடுப்புத் திட்டங்களுக்கு உதவவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Drone

அடுத்த செய்தி