ஃபேஸ்புக்குக்கு போட்டியாக வருகிறது ‘ஷூலேஸ்’ - புதிய முயற்சியில் கூகுள்!

தொடர்ந்து அமெரிக்காவின் இதர நகரங்களுக்கும் இந்த ஆப் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 16, 2019, 2:01 PM IST
ஃபேஸ்புக்குக்கு போட்டியாக வருகிறது ‘ஷூலேஸ்’ - புதிய முயற்சியில் கூகுள்!
கூகுள் ஷூலேஸ்
Web Desk | news18
Updated: July 16, 2019, 2:01 PM IST
கூகுள் நிறுவனம் புதிதாக ‘ஷூலேஸ்’ எனும் சமூகவலைதளப் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் ப்ளஸ் மிகப்பெரும் தோல்வி அடைந்தபோதும் சமூகவலைதளப் பக்கம் ஒன்றை உருவாக்கியேத் தீர வேண்டும் என்ற முனைப்பில் தற்போது ‘ஷூலேஸ்’ என்னும் சமூக வலைதளப் பக்கத்தை கூகுள் உருவாக்கியுள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போல் ஆன்லைனிலேயே உறவுகளை இணைப்பதைக் காட்டிலும் நிஜ வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது ஷூலேஸ் என அறிமுகம் கொடுத்துள்ளது கூகுள்.


ஷூலேஸ் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தின் அடிப்படையில் தற்போது நியூயார்க் நகரில் மட்டுமே பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஷூலேஸ் ஆப், பயனாளர்களின் விருப்பங்கள், உள்ளூர் நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறித்து ஆராய்ந்து வருகிறது. தொடர்ந்து அமெரிக்காவின் இதர நகரங்களுக்கும் இந்த ஆப் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து சர்வதேச பயன்பாட்டுக்கு ஷூலேஸ் வரும் எனத் தெரிகிறது. தற்போதைய சூழலில் கூகுள் ஃபார்ம் பூர்த்தி செய்து, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலம் இந்த ஆப் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஜூலை 15 முதல் ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘பிக் ஷாப்பிங் டே சேல்’..!
First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...