முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ட்விட்டரில் 5.4 மில்லியன் நபர்களின் டேட்டாக்கள் திருட்டு - அதிர்ச்சி தகவல்!

ட்விட்டரில் 5.4 மில்லியன் நபர்களின் டேட்டாக்கள் திருட்டு - அதிர்ச்சி தகவல்!

478 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும்போது 5.4 மில்லியன் பயனர்கள் என்பது குறைந்த அளவிலான பாதிப்பே என்று குறிப்பிட்டுள்ளனர்

478 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும்போது 5.4 மில்லியன் பயனர்கள் என்பது குறைந்த அளவிலான பாதிப்பே என்று குறிப்பிட்டுள்ளனர்

டிவிட்டர் யூசர்களின் தரவுகளை கொண்டு ஹேக்கர் சுமார் $30,000 டாலருக்கும் மேல் சம்பாதித்துள்ளனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் பலவித பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் உருவாகுகின்றன. குறிப்பாக நமது தனிப்பட்ட தகவல்களின் நிலை என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. இப்படி நமது தகவல்களைத் திருடி அவற்றைக் கொண்டு காசுப்பார்க்க ஒரு தனிப்பெரும் கூட்டமே உள்ளது. ஹேக்கர்கள் என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் திருடர்கள் தனிநபரின் தரவுகளை வைத்துக் கொண்டு பல கோடிகளைச் சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 5.4 மில்லியன் ட்விட்டர் யூசர்களின் தரவுகளை கொண்டு ஹேக்கர் சுமார் $30,000 டாலருக்கும் மேல் சம்பாதித்துள்ளனர்.

இது குறித்த அறிக்கை சமீபத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், இதனை ஆகஸ்ட் 2021-இல் பாதிக்கப்பட்ட 478 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும்போது 5.4 மில்லியன் பயனர்கள் என்பது குறைந்த அளவிலான பாதிப்பே என்று குறிப்பிட்டுள்ளனர். அதே மாதத்தின் பிற்பகுதியில் பாதிக்கப்பட்ட AT&T-இன் 70 மில்லியன் யூசர்களுடன் ஒப்பிடும்போதும் இந்த பாதிப்பு என்பது மிகவும் சிறியது. இருப்பினும், ரீஸ்டோர் பிரைவசியின் படி, தற்போது விற்பனையில் உள்ள ஹேக் செய்யப்பட்ட தரவுகள், ஜனவரி 2022-இல் அறிவிக்கப்பட்ட பாதிப்பிலிருந்து வருகிறது.

Also Read:உங்கள் உபர் ரைடு கேன்சல் ஆகிறதா.. இனி அப்படி நடக்காது..!

இது குறித்து ட்விட்டரிடம் கேட்டபோது, இந்த பாதுகாப்பு சிக்கல் உண்மை தான் என்று ஒப்புக்கொண்டு உள்ளது. மேலும், இந்த பிழையைக் கண்டுபிடித்தவருக்கு $5,040 டாலர் பணத்தையும் வெகுமதியாக வழங்கியது. பொதுவாக இது போன்ற தளங்களின் பிழைகளை ஹேக்கர் ஒன் (HackerOne)என்கிற தளத்தில் உள்ளவர்கள் கண்டுபிடித்து அதற்கான பரிசுகளை உரிய நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள். இந்நிலையில் ஹேக்கர் ஒன் தளத்தின் யூசர் ஜெரினோவ்ஸ்க்கி (zhirinovskiy) என்பவர் ஜனவரி மாதம் இதைக் கண்டுபிடித்தார்.

அவர் கண்டுபிடித்த போது, ட்விட்டரில் 5.4 மில்லியன் பயனர்களின் தரவுகள் விற்பனைக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும், அந்த தரவுகள் குறித்து கேட்டபோது, "யூசர்களின் தரவுகளைக் குறைந்தபட்சம் $30,000 டாலருக்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது எனக் கூறியுள்ளார். 'ட்விட்டரின் திறமையின்மை' காரணமாக இப்படியொரு பாதிப்பு உண்டாகி உள்ளது என்று அந்த ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தரவுகளை விற்பனை செய்யக் கூடிய விற்பனையாளர் ப்ரீச் ஃபோரம்ஸ் தளத்தில் இந்த தரவுகளைப் பற்றிப் பதிவிட்டுள்ளார். இது ட்விட்டர் மீதிருந்த நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read:உஷார்... வாடிக்கையாளர்களுக்கு Netflix முக்கிய எச்சரிக்கை

பொதுவாக ப்ரீச் ஃபோரம்கள் என்பவை இது போன்ற தனிப்பட்ட நபர்களின் தரவுகள் வெளியிடப்படும் போது பயன்படுத்தக் கூடிய தளமாகும். இதில் பல வகையான டிஜிட்டல் தரவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் அது குறித்துப் பல வித பதிவுகளும் இதில் குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் இது போன்ற பாதிப்புகள் பாஸ்வேர்டு மாற்றம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக ஏமாற்றப்படுகிறது. எனவே உங்களுக்கு வரக்கூடிய தவறான மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை ஒருபோதும் திறக்க வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், உங்களின் ஒடிபி போன்ற முக்கிய தரவுகளையும் யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றனர்.

First published:

Tags: Mobile Phone Users, Personal data theft, Sales, Twitter