டிக்டாக், ஹலோ ஆப்களுக்குத் தடை: ஒரே நாளில் 1.5 கோடி பேர் ஷேர்சேட் ஆப் டவுன்லோடு

டிக்டாக், ஹலோ ஆப்களுக்குத் தடை: ஒரே நாளில் 1.5 கோடி பேர் ஷேர்சேட் ஆப் டவுன்லோடு
ஷேர்சேட்
  • Share this:
டிக்டாக், ஹலோ ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளநிலையில், ஒரே நாளில் 1.5 கோடி ஷேர்சேட் ஆப்பை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சில ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயன்படுத்தும் மொபைல்போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தது. நேற்றுமுதல், டிக்டாக், ஹலோ உள்ளிட்ட ஆப்கள் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், நேற்று ஒருநாளில் ஷேர்சேட், ரொபோசா ஆகிய ஆப்கள் அதிக அளவில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த ஷேர்சேட், ‘எங்களது தளத்தை மாதத்துக்கு சுமார் 6 கோடி பயனாளர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றனர். நாங்கள் 13 மாநில மொழிகளில் ஆப் செயல்பாட்டை வழங்கிவருகிறோம். நேற்று ஒரு நாளில் மட்டும் 1.5 கோடி பேர் புதிதாக ஷேர்சேட் ஆப்பை டவுன்லோடு செய்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு சுமார் 5 லட்சம் பேர் வரை டவுன்லோடு செய்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை மத்திய அரசு தடை செய்த நிலையில் ஷேர்இட் ஆப் டவுன்லோடு செய்துள்ளனர். அதேபோல, ரோபொசோ என்ற ஆப்பும் நேற்று மட்டும் அதிக அளவில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. ஷேர்சேட் இந்திய நிறுவனமாகும்.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading