உங்கள் டிவைஸ்களில் நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரை பயன்படுத்தி வருகிறீர்களா..? அப்படி என்றால் Chrome பிரவுசர் யூஸர்களுக்காக கூகுள் நிறுவனம் வழங்கி உள்ள சமீபத்திய எச்சரிக்கை பற்றி நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கூகுள் நிறுவனம் Google Chrome பிரவுசரில் புதிய பக் (bug) ஒன்றை கண்டறிந்துள்ளது. எனவே குரோம் யூஸர்கள் உடனடியாக Chrome-ன் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே இது பற்றி இந்திய இன்டர்நெட் யூஸர்களுக்கு எச்சரிக்கை வழங்கி இருக்கும் இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In), யூஸர்கள் லேட்டஸ்ட் Google Chrome வெர்ஷனான 99.0.4844.84-ஐ உடனடியாக அப்டேட் செய்து கொள்ளுமாறு தீவிர அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது.
இது தொடர்பான எச்சரிக்கை அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ள CERT-In, Google Chrome-ல் ஒரு பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்த bug ( CVE- 2022-1096) டார்கெட் செய்யப்படும் டிவைஸில் arbitrary code எனப்படும் தன்னிச்சையான குறியீட்டை இயக்க அனுமதிக்கும். இதனால் குறிப்பிட்ட டிவைஸ் ஹேக் செய்யப்படும் அபாயம் மிக அதிகம். எனவே விரைவாக கூகுள் குரோமின் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து Chrome யூஸர்களும் தங்கள் பிரவுசர்களை லேட்டஸ்ட் வெர்ஷனான 99.0.4844.84-க்கு அப்டேட் செய்ய கூகுள் பரிந்துரைத்துள்ளது. இது Windows, Mac மற்றும் Linux-க்கு வர உள்ள நாட்களில் வெளிவரும். கூகுள் குரோமில் காணப்படும் புதிய Bug பற்றிய பல விவரங்களை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், “பெரும்பாலான யூஸர்கள் அப்டேட் செய்யும் வரை அந்த Bug விவரங்கள் மற்றும் லிங்க்ஸ்களுக்கான அணுகல் தடை செய்யப்படலாம் என்று தெரிகிறது. இப்போது உங்கள் Chrome பிரவுசரை எவ்வாறு அப்டேட் செய்வது.?
Also Read : 34 வயது நபரின் உயிரைக் காத்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்...
படி 1: கூகுள் குரோமை அப்டேட் செய்ய முதலில் உங்கள் சிஸ்டம் அல்லது டிவைஸில் குரோம் பிரவுசரை ஓபன் செய்யவும். இது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸில் கிடைக்கிறது
படி 2: பிரவுசர் பேஜின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று டாட்களை டேப் செய்யவும்
படி 3: பின்னர் செட்டிங்ஸை கிளிக் செய்யவும்
படி 4: இதனை தொடர்ந்து, ''About Chrome' என்பதை டேப் செய்யவும். நீங்கள் எந்த வெர்ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்பதை இங்கே பார்க்கலாம்
படி 5: உங்கள் குரோம் பிரவுசர் பழைய வெர்ஷனில் இருந்தால், நீங்கள் 'About Chrome சென்றவுடன் தானாகவே உங்கள் Google Chrome-ன் லேட்டஸ்ட் வெர்ஷனான 99.0.4844.84 அப்டேட் ஆவதை நீங்கள் காண முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.