ஆண்ட்ராய்டு டிவிக்கள் வந்த பிறகு ரிமோட்டிற்கான தேவை அதிகரித்துவிட்டது. அந்த ரிமோட்களுக்கு அடிக்கடி பேட்டரி மாற்றும் வேலையைக் குறைக்கும் வகையில் புதிய செல்ஃப் சார்ஜிங் பேட்டரியை உருவாக்கியுள்ளது ஒரு நிறுவனம். இப்போது அறிமுகமாகும் பல்வேறு புதிய தொழில் நுட்ப சாதனங்கள் நமது தினசரி வேலையை எளிமையாக்குகின்றன. அதேபோல் பல முன்னணி நிறுவனங்கள் மக்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றே கூறலாம். குறிப்பாக இப்போது மக்கள் சாதாரண டிவிகளை பயன்படுத்துவதை விட ஸ்மார்ட் டிவிகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கிறது என்றே கூறலாம். ஆனால் சாதாரண டிவிகளின் ரிமோட் பேட்டரி அளவை விட ஸ்மார்ட் டிவிகளின் ரிமோட்டின் பேட்டரிக்கு அதிக தேவை இருக்கும்.
மேலும் இவை அடிக்கடி சார்ஜ் தீர்ந்து மாற்றவேண்டிய நிலைமை கூட உள்ளது. இந்நிலையில் இந்த பேட்டரி பிரச்சனைக்கு முடிவுகட்ட ஒரு நிறுவனம் அருமையான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. அதாவது தானாகவே சார்ஜ் ஆகிக்கொள்ளும் ரிமோட் ஒன்றை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த TW Electronics நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கண்டிப்பாக இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்றே கூறலாம். அதாவது ரிமோட் அடியில் உள்ள பேட்டரி மேலே ‘Photovoltaic Panel’ என்ற ஒரு சாதனத்தை பொருத்தி அதன் மூலமாக சார்ஜிங் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக நாம் தனியாக எதுவும் செலவழிக்கத் தேவை இருக்காது. நமது வீட்டில் இருக்கும் சூரிய வெளிச்சம் போதும். அந்த வெளிச்சம் மூலம் நமது ரிமோட் தானாக சார்ஜ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் TW எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்த தகவல் என்னவென்றால், தானாகவே சார்ஜிங் ஆகிக்கொள்ளும் ரிமோட் கண்ட்ரோல் அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி என்றும், இதனை Exeger மற்றும் Google Tv உடன் இணைந்து விரைவாக உருவாக்க முடிந்ததாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஒளியை மின்சாரமாக மாற்றி ரிமோட் உள்ளே இருக்கும் பேட்டரி சார்ஜ் ஆகும் வகையில் புதிய ரிமோட் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதே போன்றதொரு புதிய டெக்னாலஜி ஒன்றை சாம்சங், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போன்ற முன்னனி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் செல்ஃப் சார்ஜிங ரிமோட்டகளை உருவாக்கி விட்டால் ரிமோட்களுக்கு பேட்டரி மாற்றும் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். இந்த மேம்பட்ட வசதியை வரும்காலத்தில் அனைத்து டிவிகளிலும் எதிர்ப்பாக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Smart tv, Technology