வரவேற்பை பெற்ற விதை விநாயகர்!

news18
Updated: September 12, 2018, 11:26 AM IST
வரவேற்பை பெற்ற விதை விநாயகர்!
news18
Updated: September 12, 2018, 11:26 AM IST
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று விநாயகர் சதுர்த்தி.  நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு புதிய வடிவங்களில் வண்ண அலங்காரத்துடன் பளபளக்கும் பிள்ளையார் சிலைகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

உற்சாகமான விழா கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், விநாயகர் சிலைகளை கடல், குளம், குட்டைகளில் கரைப்பது தொடர்பான சர்ச்சைகளும் ஆண்டுதோறும் உள்ளன. கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால், நீர் மாசுபாடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இதனால், பசுமை விநாயகர் தயாரிப்பும் களைக்கட்டுகின்றன.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற, ரசாயனப் பொருட்களை தவிர்த்து, முற்றிலும் களி மண்ணைக் கொண்டு விநாயகர் சிலைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்த சிலைகளின் நடுவில் விதைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்தபிறகு, சிறுதொட்டியில் வைத்து நீர் ஊற்றி வர வேண்டும். 10 நிமிடத்தில் களிமண் முழுவதும் கரைந்து விடும், பின் அதன் உள்ளே இருக்கும் விதை முளைக்க ஆரம்பிக்கும். பின்னர் இதனை தொடர்ந்து தொட்டியிலோ அல்லது நிலத்திலோ நட்டு வைத்து வளர்க்கலாம்.பெருநகரங்களில் அடுக்கு மாடிகளில் வாழுபவர்கள் அமைக்கும்  வீட்டுத் தோட்டங்களுக்கு வசதியாக தொட்டிகளில் வைத்து விநாயகர் சிலையை கரைத்தால் அதனுள்ளிருக்கும் விதைகள் சில நாட்களில் முளை விடத் தொடங்கும். விநாயகர் சிலை கரைந்தபின் முளைவிடும் விதைகள் மக்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்று விதை விநாயகரை உருவாக்குபவர்கள் கூறுகின்றனர்.

விதை விநாயகர் சிலைக்கு ஆன் -லைனில் விற்பனை அதிகரித்துள்ளது . சுற்றுச்சூழல் நலனை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பசுமை விநாயகர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று விதை விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...