முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஐ-போன்களில் பாதுகாப்பு குறைபாடு.. உடனடியாக இதை செய்யவும் - ஆப்பிள் நிறுவனம்

ஐ-போன்களில் பாதுகாப்பு குறைபாடு.. உடனடியாக இதை செய்யவும் - ஆப்பிள் நிறுவனம்

ஆப்பில் ஐபோன்

ஆப்பில் ஐபோன்

பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஆப்பில் பயனாளர்கள் உடனடியாக தங்கள் சிஸ்டமை அப்டேட் செய்துகொள்ளுமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

iOS எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேடிங் சிஸ்டமில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஆப்பிள் பயனாளர்கள் தங்கள் சாப்ட்வேரை உடனடியாக அப்டேட் செய்யக்கோரியும் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனது ஆப்பரேடிங் சிஸ்டமில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி ஹேக்கர்கள், ஐபோன், ஐபேட், மேக் உள்ளிட்ட கருவிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆப்பிள் பயனாளர்கள் உடனடியாக தங்கள் சிஸ்டமை அப்டேட் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த குறைபாடு, ஐபோன் 6s, ஐபேட் 5th gen முதல் ஐபேட் மினி 4 வரை பல்வேறு மாடல் உள்ளதாக தெரிவித்துள்ளது ஆப்பில் நிறுவனம். மேலும் ஆப்பிளின் SAFARI பிரவுசர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களும் இந்த குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

top videos

    பாதுகாப்பு அம்சத்திற்குப் பெயர் போன ஆப்பில் மொபைல்களிலேயே பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது, பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Apple IOS, Apple iphone, Cyber attack