Home /News /technology /

செக்யூரிட்டி அலர்ட்: உங்கள் ஆப்பிள் ஐஃபோன் மற்றும் ஐபேட் போன்றவற்றை உடனடியாக அப்டேட் செய்யவும்

செக்யூரிட்டி அலர்ட்: உங்கள் ஆப்பிள் ஐஃபோன் மற்றும் ஐபேட் போன்றவற்றை உடனடியாக அப்டேட் செய்யவும்

ஐபோன்

ஐபோன்

Security Alert : ஆப்பிள் நிறுவனம் இப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்காக புதிய செக்யூரிட்டி அப்டேட் ஒன்றை வெளியிட்டிருகிறது.

சந்தைகளில் இருப்பதிலேயே வாடிக்கையாளர்களின் டேட்டா பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான் ஆப்பிள் நிறுவனம். அதனால் தான் மற்ற நிறுவனங்களின் ஃபோன்களை காட்டிலும், ஆப்பிள் ஃபோன்களுக்கான மவுசும், விலையும் சற்று அதிகம்.

இத்தகைய சிறப்புகளை கொண்ட ஆப்பிள் நிறுவனம் இப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்காக புதிய செக்யூரிட்டி அப்டேட் ஒன்றை வெளியிட்டிருகிறது. கடைசியாக ஆப்பிள் நிறுவனம் சார்பில் ஐஓஎஸ் 15.3 வெளியிடப்பட்டு இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தற்போது மேம்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு அம்சங்களுடன் ஐஓஎஸ் 15.3.1 வெளிவந்துள்ளது. ஐஃபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில், பிரைய்லீ டிஸ்பிளே அவ்வபோது செயல்பாட்டை நிறுத்தி வந்த நிலையில், அதற்கும் தீர்வு காணும் விதமாக புதிய அப்டேட் அமைந்துள்ளது. இது மட்டுமல்லாமல், உங்கள் டிவைசில் தேவையற்ற கன்டென்ட்களை அனுமதிக்கும் வெப்கிட்டின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வசதி புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஓஎஸ் 15.3.1 மற்றும் ஐபேட் ஐஓஎஸ் 15.3.1 ஆகியவற்றில் பிரைய்லீ டிஸ்பிளே பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது ஆப்பிள் ஃபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்தி வந்த பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி பயனாளர்கள், பிரைய்லீ டிஸ்பிளே வசதி அவ்வபோது இயங்காமல் போனதால் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இதுமட்டுமல்லாமல், வெப்கிட் என்ற பக்ஸ் மூலமாக ஆட்சேபனைக்குரிய கன்டென்ட் வெப் பிரவுசரில் வருவதை எங்களது நிறுவனம் கண்டறிந்தது. இந்த இரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக அமைந்துள்ள ஐஓஎஸ் 15.3.1 வெர்சனை, வாடிக்கையாளர்கள் கூடுமான வரையில் விரைவாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ட்விட்டரில் வீடியோ பிளேபேக் ஸ்பீடை குறைக்க & அதிகரிக்க உதவும் புதிய அம்சம் அறிமுகம்!

இதற்கிடையே சமீபத்திய அப்டேட் உடன் வாட்ச் ஓஎஸ் 8.4.2 என்ற வெர்சனையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 4 அல்லது அதற்கு மேற்பட்ட புது வகை மாடல்களில், தர்ட் பார்டி சார்ஜர்களை இயங்கி விடாமல் தடுத்து வந்த பக்ஸ்களுக்கு தீர்வு காண்பதாக இந்த புதிய அப்டேட் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஆப்பிள் வாட்ச்களுக்கான வாட்ச்ஓஎஸ் 8.4 என்ற வெர்சன் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அந்த வெர்சனில் இருந்து சிறிய மாற்றங்களுடன் வாட்ச்ஓஎஸ் 8.4.2 வெர்சன் வெளியிடப்பட்டுள்ளது.

காதலர் தின ஸ்பெஷல் கிஃப்ட்

பிரியமானவர்களுக்கு நாம் வழங்கும் பரிசுகளில், மிகவும் ஸ்பெஷலாக, மறக்க முடியாத ஒன்றாக இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் புராடக்ட்கள் ஆகும். இந்த காதலர் தினத்தை முன்னிட்டு ஐஃபோன், ஐபேட், ஏர்போட்ஸ், ஏர்டேக்ஸ் போன்றவற்றை வாங்கி உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாக வழங்கலாம்.

இதையும் படியுங்கள் : ட்விட்டரில் பாதுகாப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன.!

ஆப்பிள் டிவைஸ் மீது உங்கள் உருவம் மற்றும் பிடித்தமான வாசங்களை பொறித்து வாங்குவதற்கான புதிய வசதி இந்நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலம் மட்டுமல்லாமல், தமிழ், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, கனடா, தெலுங்கு, குஜராத்தி போன்ற மொழிகளிலும் உங்களுக்கு பிடித்தமான வகையில் டிவைஸை மாற்றிக் கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Apple, Apple iphone

அடுத்த செய்தி