டார்வினின் "Survival of the fittest" ( தகுதி உள்ளது தப்பி பிழைக்கும்) என்ற கோட்பாடு உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். எதிரிகளிடம் இருந்து தப்ப பச்சோந்திகள் தங்கள் சுற்றுப்புறத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்றும் என்று நாம் படித்திருப்போம். ஆனால் சில தவளை இனங்கள் கூட தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் சில தவளை இனங்கள் பகலில் தங்கள் உடலை பாதுகாத்துக்கொள்ள கண்ணாடி போல மாற்றிக்கொள்கிறது. பொதுவாக தவளைகளின் மென்மையான, பச்சை நிற வெளிப்படையான தோல் நிழல்களை ஏற்படுத்தாது. இதனால் அவை பறவைகள் மற்றும் பிற வேட்டை பிராணிகளிடம் இருந்து தப்பித்து விடுகிறது.
ஆனால் உணவு தேடவும் இனப்பெருக்கத்திற்கும் செல்லும்போது மாட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான் இந்த ட்ரிக்கை பயன்படுத்திக்கொள்கிறது. அதுவும் முக்கியமாக வடக்கு பகுதிகளில் இருக்கும் கண்ணாடித் தவளைகள் பூச்சிகள் மற்றும் தனது துணையைத் தேடி சுற்றித் திரியும்போது, அவை ஒளிபுகா சிவப்பு-பழுப்பு நிறத்தைப் பெற்று உலவுகின்றன.
இதையும் படிங்க : நம் ஊர் ஏரியில் வீடு கட்டி பார்த்திருப்போம்... விண்கல் பள்ளத்தில் நகரம் இருந்து பார்த்திருக்கீங்களா?
விலங்குகளில் வெளிப்படைத்தன்மை என்பது ஒரு சிக்கலான உருவ-மறைப்பு வடிவமாகும். இது உயிரினம் முழுவதும் ஒளி சிதறல் மற்றும் உறிஞ்சுதலைக் குறைக்கும் உடல் அமைப்புகளை உள்ளடக்கி இருக்கும். இது அடிப்படை நுண்ணுயிரிகளில் எளிதாக சாத்தியப்படும். ஆனால் முதுகெலும்பு உள்ள விலங்குகளில், வெளிப்படைத்தன்மையை அடைவது கடினம், ஏனெனில் அவற்றின் ரத்த ஓட்ட அமைப்பில் சிவப்பு இரத்த அணுக்கள் (RBCs) நிரம்பியுள்ளது.
அதை மீறி எப்படி தவளைகள் கண்ணாடி போல் மாறுகின்றன என்று ஒளி மற்றும் அல்ட்ராசவுண்ட் இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் ரகசியத்தைக் கண்டுபிடித்துள்ளனர். எதிரிகளிடம் இருந்து ஆபத்து என்று உணரும்போதும் தூங்கும்போதும் தவளைகள் தன் உடலில் உள்ள 90% சிவப்பு இரத்த அணுக்களை கல்லீரலில் மறைந்து கொள்கிறது.
மேலும் தவளைகள் அவற்றின் பெரும்பாலான உள் உறுப்புகளையும் சுருக்கி ஒன்றாக இணைக்கின்றன. இதனால் உடல்திசுக்கள் கண்ணாடிபோல் மாறிவிடுகிறது. இந்த கல்லீரல்-பேக்கிங் செயல்முறையைப் புரிந்துகொள்வது ஹீமோடைனமிக்ஸ் பற்றிய நமது புரிதலை இன்னும் பரந்த அளவிற்கு எடுத்துச்செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இரத்தத்தை மிகவும் இறுக்கமாக குவிப்பது மரணம் உறைவதற்கு வழிவகுக்கும். ஆனால் எப்படியோ, தவளைகள் உயிர் பிழைக்கின்றன. இயற்கையே அதிசயங்கள் நிறைந்தது. அதில் ஒரு அதிசய மாற்றத்தின் யுக்தி தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.