காலநிலை மாற்றம் மனிதர்கள் உட்பட பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. விரைவான சுற்றுச்சூழல் சீரழிவை தடுக்கும் வழிகளைப் பற்றி பல ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குரல் கொடுத்து வந்தாலும், அதற்கான முயற்சிகள் என்னவோ பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் காலநிலை பிரச்சினைக்கு மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் ஒன்று கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உற்பத்தி, அதிலும் குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு நமது வளிமண்டலத்தில் சமநிலையை குறைத்து வருகிறது. புதைபடிவ அடிப்படையிலான மூலப்பொருளை எரிக்கும் ஒவ்வொரு முறையும் பூமியில் CO2 உற்பத்தி செய்யப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களை நாம் சார்ந்திருப்பது இப்போது மிகப்பெரிய அச்சுறுத்தும் பிரச்சனையாக மாறியுள்ளது.
நமது வளிமண்டலத்தில் CO2 செறிவு 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 280 ppm இலிருந்து ஒரு மில்லியனுக்கு 440 பாகங்களாக வளர்ந்துள்ளது. இந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த ஃபிரான்ஹோஃபர் சொசைட்டி விஞ்ஞானிகளின் CO2 உமிழ்வைக் குறைப்பதற்கான சாத்தியமான வழிகளை கண்டுபிடித்துள்ளனர். Azom.com-ல் வெளியான ஆய்வு அறிக்கையின்படி, விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி CO2-ஐ பிளாஸ்டிக்காக மாற்றும் முறையை கொண்டு வந்துள்ளனர்.
கார்பன் டை ஆக்சைடு வாயுவை பிளாஸ்டிக்காக மாற்றுவதில் இரண்டு-நிலை செயல்முறை உள்ளடக்கியிருக்கிறது. முதல் கட்டத்தில், CO2 ஃபார்மிக் அமிலம் மற்றும் மெத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அது பின்னர் இரண்டாவது கட்டத்தில் பாலிமர்களுக்கான கட்டுமானத் தொகுதிகளாக மாற்றப்படுகிறது.
இந்த புதிய ஆய்வு குறித்து விளக்கிய ஃபிரான்ஹோஃபர் ஐஜிபி-யின் மூத்த விஞ்ஞானி உயிரியல் ஆய்வாளர் டாக்டர் ஜொனாதன் ஃபேபரியஸ், இந்த செயல்பாட்டில் இரண்டு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியதாகக் கூறினார். முதல் அணுகுமுறை, பன்முக இரசாயன வினையூக்கம் ஆகும். இதன் மூலம் அவை CO2-ஐ ஒரு வினையூக்கியைப் பயன்படுத்தி மெத்தனால் ஆக மாற்றுகின்றன. இரண்டாவது அணுகுமுறை, மின் வேதியியல் ஆகும். இதன் மூலம் அவை CO2-லிருந்து ஃபார்மிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன.
இந்த செயல்முறை பின்னர் உயிரி தொழில்நுட்பக் கருவிகளின் கலவையை சார்ந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக நொதித்தல் நுண்ணுயிரியை இவை தூண்டியது. எளிமையாகச் சொன்னால், CO2 முதலில் ஃபார்மிக் அமிலம் மற்றும் மெத்தனால் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இந்த தயாரிப்பு நுண்ணுயிரிகளில் செலுத்தப்படுகிறது. இதன் ரெஸ்பான்ஸாக இந்த கலவை பாலிமர் போன்ற கூடுதல் தயாரிப்புகளாக மாறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த மாற்றத்தை எளிதாக்க இப்போது வரை பயன்படுத்தப்பட்டு வந்த பாரம்பரிய முறைக்கு அதிக அளவு ஆற்றல் மற்றும் நச்சு கரைப்பான் தேவைப்படுகிறது. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தை அதே பணியை ஒரு மிதமான மற்றும் ஆற்றல்-திறமையான சூழலில் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.