ஆழமான நீர் பவளப்பாறைகள் 50 மீட்டர் அல்லது அதற்கு கீழ் ஊடுருவும் சிறிய சூரிய ஒளியை உள்வாங்கி வாழும். இந்த செயலுக்கு ஃப்ளோரசன்ட் நிறமிகள் உதவுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சந்தேகித்தனர். ஆனால் அவர்களுக்கு நேரடி ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை . இப்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
பவளம் என்பது முதுகெலும்பில்லாத விலங்குகளை கொண்டிருக்கும். அவற்றில் ஒன்று எலும்பு போன்ற கால்சியம் கூட்டை உருவாக்கும். அதன் மீது நிறமிகள் கொண்ட பாசிகள் வாழும். இதனால் தான் வண்ண வண்ண பவளப்பாறைகள் உருவாக்குகின்றன. அந்த இரண்டு உயிர்களும் ஒன்றை ஒன்று சேர்ந்து வாழும் தன்மை உடையது.
ISRO : விண்வெளி சுற்றுலா நோக்கி பறக்கும் இஸ்ரோ
பாசிகள் ஒளிச்சேர்க்கை மூலம் தயாரிக்கும் உணவைப் பகிர்ந்து கொள்கின்றன. விலங்குகள் ஒளியின் பற்றாகுறைகளை சமாளிக்க பல்வேறு வழிகளைக் கையால்கின்றன. அவற்றின் திசுக்களை விரிவுபடுத்துதல் அல்லது சுருங்குதல், பொறுத்து அவற்றின் எலும்புக்கூட்டிற்குள் ஒளி எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது மாறுபடும்.
அவை பல்வேறு நிறமிகளையும் கொண்டிருக்கின்றன, அவற்றில் சில புலப்படும் ஒளியால் ஒளிரும். மெல்லிய கேபிள்களின் முடிவில் சிறிய சென்சார்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஆய்வக மீன் வலையில் வைக்கப்பட்ட இரண்டு வகையான பவளங்களின் ஒளியை நேரடியாக அளந்துள்ளனர்.
அந்த பவளங்களில் உள்ள ஃப்ளோரசன்ட் நிறமிகள் நீல-பச்சை ஒளியை உறிஞ்சுகின்றன. இது ஆழமான நீர் வரை ஊடுருவும் நீள ஒளி அலை ஆகும். சிறிது நேரத்தில் பவளப்பாறைகளின் நிறமிகள் ஆரஞ்சு-சிவப்பு ஒளியை உமிழ்ந்தன. இந்த இனத்திற்கு எக்கினோபிலியா என்று பெயர். சாலிஸ் பவளப்பாறை என்று அழைக்கப்படுகிறது.
கடல் மாசுவை சுத்தம் செய்ய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் ரோபோ மீன்... சீன விஞ்ஞானிகள் அசத்தல்
கணக்கீடுகளின்படி, நிறமிகள் மேற்பரப்பில் இருந்து 50 முதல் 80 மீட்டர் கீழே வாழும் பவளப்பாறைகளுக்கு கிடைக்கும் ஆரஞ்சு-சிவப்பு ஒளியை இரட்டிப்பாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நீலம்-பச்சை நிறத்துடன் ஒப்பிடும்போது ஆரஞ்சு-சிவப்பு ஒளி மிகவும் எளிதாக திசுக்களுக்குள் செல்கிறது, பவளத்தின் உள்ளே ஆழமாக சென்றடைகிறது மற்றும் மறைமுகமாக அதிக திசுக்களை ஒளிச்சேர்க்கை செய்ய அனுமதிக்கிறது.
ஆரஞ்சு-சிவப்பு பளபளப்பானது பவளத்தின் உள்ளே ஒளிச்சேர்க்கையை எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை அளவிட முனைந்தனர். பவளத்தின் உள்ளே ஒளி எவ்வாறு உறிஞ்சப்பட்டு உமிழப்படுகிறது என்பதன் சிக்கலைப் புரிந்துகொள்வது, போட்டியிடும் பவளப்பாறைகளை விட சில பவளப்பாறைகள் எவ்வாறு சுற்றுச்சூழல் நன்மையை உருவாக்குகின்றன என்பதைப் பற்றிய நுண்ணறிவை வழங்க முடியும். எடுத்துக்காட்டாக, தொட்டிகளில் உள்ள பாசிகள் மூலம் பயோடீசலின் தொழில்துறை உற்பத்தியை மேம்படுத்த, பயன்படுத்தக்கூடிய புதுமையான பொருட்களின் வடிவமைப்பைத் தெரிவிக்கவும் இது உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Environment