ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அசாமில் விழுந்த அறிய விண்கல்.. ஆராய்ச்சியில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்கள்!

அசாமில் விழுந்த அறிய விண்கல்.. ஆராய்ச்சியில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்கள்!

விண்கல்

விண்கல்

விண்கல்லின் தாதுக்களில் (Minerals) சில அரிய வெசிகுலர் ஆலிவைன் (Rare vesicular olivine) மற்றும் பைராக்ஸீன் (pyroxene) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India

இந்தப் பூமி எப்படி உருவானது, இதில் உள்ள இத்தனை கோடி உயிர்கள் எப்படி உருவானது என்ரூ தெரிந்து கொள்ள மக்கள் பல நூறு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதற்குஅவர்கள் தேடும் முக்கிய ஆதாரங்களில் ஒன்று விண்கற்கள். பூமியைப் பற்றி தெரிந்து கொள்ள ஏன் விண்கற்களில் ஆதாரம் தேட வேண்டும் என்று நினைக்கலாம்.அதற்கு காரணம்..…

இந்த சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள், விண்கற்கள் எல்லாவற்றிற்கும் ஏதேனும் ஒரு ஒற்றுமை இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு காலத்தில் வெறும் விண்கல் போல் இருந்த பூமி தான் இன்று உயிர்கள் வாழும் கிரகமாக மாறியுள்ளது. எனவே பூமியின் தொடக்க கால நிலையை விண்கற்கள் பிரதிபலிக்கக்கூடும்.

ஆகையால் தான் ஒரு விண்கல், விண்வெளியில் மிதந்தாலும்  அல்லது பூமியில் வந்து விழுந்தாலும், ஆராய்ச்சியாளர்கள் அதன் மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்கின்றனர். உலகின் பல பகுதிகள் விண்கற்கள் விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் கிடைத்த மாதிரிகளை ஆராய்ச்சி செய்துகொண்டே இருக்கின்றனர்.

இதையும் படிங்க :இனி பாஸ்வேர்ட் கிடையாது… ஒன்லி பாஸ் கீ தான்… கூகுள் அதிரடி..

அதை போல ஏழு வருடங்களுக்கு முன்பு, அசாம் மாநிலத்தில் உள்ள கோலாகாட் (Golaghat ) மாவட்டத்தில் உள்ள கமர்காவுன் (Kamargaon) என்கிற நகரில், 12 கிலோ எடையுள்ள விண்கல் ஒன்று விழுந்தது. இது ஒரு 6 கிலோமீட்டர் நீளமுள்ள விண்கல்லில் இருந்து சிதறிய ஒரு துண்டு என்பது தெரியவந்துள்ளது.

செவ்வாய் மற்றும் வியாழன் இடையே அமைந்துள்ள ஆஸ்ட்ராய்டு பெல்ட்டில் (Asteroid belt) இருந்து வந்ததாக கூறப்படும் இந்த விண்கல் இதுவரை பூமியில் மோதிய மற்ற விண்கல்லை விட சற்று வேறுபட்டு இருந்துள்ளது. கிடைத்த விண்கல்லின் வேதியியல் கலவையானது (Chemical composition) நட்சத்திரங்களின் மையத்தில் இருப்பது என்பது புலனாகிறது.

விண்கல்லின் தாதுக்களில் (Minerals) சில அரிய வெசிகுலர் ஆலிவைன் (Rare vesicular olivine) மற்றும் பைராக்ஸீன் (pyroxene) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனென்றால், சூரியக் குடும்பத்திலிருந்து கிடைத்த ஒரு விண்கல்லில் இந்த வேதியியல் கலவையில் கிடைத்தது இதுவே முதல் முறை ஆகும்.

இதையும் படிங்க : காலநிலை மாற்றத்தில் மனிதர்களை காக்க கார்பன் மடுவாகும் திமிங்கலங்கள் -ஆய்வில் தகவல்

இந்த ஒரு காரணத்திற்காகவே, அசாம் விண்கல் தொடர்பான இந்த ஆய்வில் ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்துள்ளனர்.

அந்த பெரிய விண்கல் ஆனது வேறொரு விண்கல் மீது மோதி அதன் விளைவாக, அதிலிருந்து சிறிய சிறிய துண்டுகள் விண்வெளியில் சிதறவிடப்பட்டுள்ளன. அதிலொரு துண்டு தான் அசாமில் வந்து விழுந்துள்ளது. ஒருவேளை அந்த 6.4 கிமீ நீளமுள்ள விண்கல் ஆனது நேரடியாக பூமி மீது மோதி இருந்தால் பாதி மாநிலமே பாதிக்கப்பட்டிருக்கும்.

First published:

Tags: Assam, Research, Tamil News