ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

செவ்வாய் மேற்பரப்பை விட நிலத்தடியில் உயிர் வாழும் சாத்தியம் அதிகம்- புதிய ஆய்வில் தகவல்

செவ்வாய் மேற்பரப்பை விட நிலத்தடியில் உயிர் வாழும் சாத்தியம் அதிகம்- புதிய ஆய்வில் தகவல்

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம்

உப்பை தண்ணீரில் கரைப்பதைப் போன்றது. அதிக உப்பு இருந்தால், அது கீழே தங்கத் தொடங்குகிறது. அதே போல செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் கீழே படிந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை விட அதன் நிலத்தடியில் உள்ள சூழல் மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளது.

ஜியோபிசிகல் ரிசர்ச்: கிரகங்கள் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையின் படி அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் ஆய்வு செய்யும் கேல் பள்ளத்தில் மேற்பரப்பில் இருக்கும் தனிமங்களை விட அங்கு இருக்கும் பிளவுகள் மூலம் கிடைத்த நிலத்தடி கனிமம் உயிர்கள் வாழ தகுந்த பண்புகளை கொண்டுள்ளதாக கூறுகிறது.

செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை கண்டுபிடிக்க வறண்ட நிலமாக மாறிய ஏறி என்று கணிக்கப்படும் கேள் பள்ளத்தில் கியூரியாசிட்டி ரோவர் தரை இறக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளம் -70 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் குளிர் மற்றும் கடுமையான வெப்பநிலைக்கு பெயர் பெற்றது

ரோவர் அங்குள்ள மண் மாதிரிகளை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. அங்குள்ள மண் மாதிரிகள் சில கடந்த வாரம் பூமிக்கு சிறிய ரக ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அது பூமியை அடையும் போது அதை இங்குள்ள ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வர்.

இதனிடையே செவ்வாய் கிரகத்தில் நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர் டைனமிக் ஆல்பிடோ ஆஃப் நியூட்ரான்கள் அல்லது DAN மூலம் பகுப்பாய்வு செய்த தரவுகளின் படி  அதன் பரந்த மேற்பரப்புக்கு இடையே உள்ள விரிசல்கள் மற்றும் பிளவுகள் நீர் நிறைந்த மற்றும் கதிர்வீச்சு-கவச நிலைமைகளை கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

விரிசல்களிடையே காணப்படும் ஒளி-நிற ஓபலைன் சிலிக்கா அம்சங்கள் செவ்வாயின் புவியியல் வரலாற்றில் ஒரு பரந்த திரவ ஓட்டத்திற்கான சுவடுகளையும் அதில் வெளிப்படும் வேர்கல் போன்ற அமைப்பையும்  காட்டுகின்றன. ஆனால் கிரகத்தில் திரவங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதை தொடர்ந்து வறண்ட குளிர் காலநிலை மட்டுமே நிலவி வருகிறது.

அதோடு ஆராய்ச்சியாளர்கள், கியூரியாசிட்டி ரோவரால் அனுப்பப்பட்ட பழைய படங்களை ஆராய்ந்ததில் அதில் சில நில பிளவுகள் காணப்பட்டன. அதுதொடர்ந்து விரிவடைவதோடு அதன் உள்ளே தெரியும் பாறை அமைப்புகள் சமீப கால சுவடுகளை காட்டுகின்றன. மேலும் அதில் உயிர்கள் வாழ அவசியமான சிலிக்கா மற்றும் நீரின் கரைசல் காணப்படுகிறது.

இது சர்க்கரை அல்லது உப்பை தண்ணீரில் கரைப்பதைப் போன்றது. அதிக உப்பு இருந்தால், அது கீழே தங்கத் தொடங்குகிறது. அதே போல செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் நிறைந்த சூழல்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள கடுமையான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பான புகலிடத்தை தேடி நிலத்தடியில் படித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: MARS, NASA, Research