பூமி தவிர வேறொரு கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று தொடர்ந்து வெவ்வேறு தரவுகள் ஆய்வு முடிவுகள் வெளியாகி வந்துள்ளன. சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் இருக்கும் ஐஸ் கேப்பின் அடிப்பகுதியில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக சர்வதேச ஆய்வுக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது மற்றும் இவர்களுக்கு உதவியாக, ஷெஃப்பீல்டு பல்கலைகழகமும் செயல்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் அனைத்துமே நேச்சர் அஸ்ட்ரானமி என்ற ஜர்னலில் வெளியாகியுள்ளது. ரேடாரை பயன்படுத்தி பெறப்படும் டேட்டாவை தவிர்த்து, தனியாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள், ஸ்பேஸ்கிராப்ட் லேசர் ஆல்டி-மீட்டரைப் பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டியின் உயரத்தைக் கண்டுபிடிக்க, மேற்புறத்தின் வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றை அளவு எடுத்தனர்.
பனிப்பாறைகளின் கீழே இருக்கும் நீர் நிலை அல்லது திரவம் எவ்வாறு அதனுடைய மேற்புறத்தை பாதிக்கும் என்பதை அவர்கள் கணினியில் தயாரித்து வைத்திருந்த கணிப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்து அந்த வடிவங்கள் எவ்வாறு பொருந்தும் என்பதைக் காண்பித்தனர்.
ஆய்வாளர்கள் காண்பித்த முடிவுகள், அடிப்பகுதியில் திரவம் இருக்கும் பனிக்கட்டி அல்லது பனி மேற்பரப்புகளில் உள்ள ரேடார் அளவீடுகளின் பொருத்தமாக இருக்கின்றன.
ரேடார் அனுப்பிய தரவுகளில் இருந்து பெறப்பட்ட திரவம் அல்லது நீரநிலை பற்றிய விவரங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. பலரும் இந்த கூற்றை ஏற்றுக்கொள்ளும் நிலையில், சிலர், ரேடார் வெளியிட்ட சமிக்ஞைக்கு திரவம் காரணம் இல்லை என்று மறுக்கின்றனர்.
Also Read : அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சர்ச் என்ஜினாக மாறியுள்ள Google Chrome - பயர்பாக்ஸ் இரண்டாமிடம்...
ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான ஃபிராங்க்ஸ் புட்ச்சர், “செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கு இரண்டு முக்கிய சான்றுகள் மூலம் இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. பூமியில் நாம் பனிப்பாறை ஏரிகளில் என்ன தேடிக்கொண்டிருக்கிறோமோ, அது இப்பொழுது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று யோசிக்கும் பொழுது, தண்ணீர் தான் அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரம்; தண்ணீர் இருக்கும் இடத்தில் நிச்சயமாக உயிரினங்கள் வாழும் அல்லது வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும். ஆனால், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதால் அங்கே உயிரினங்கள் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also Read : உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை பயன்படுத்த விரும்புகிறீர்களா.? - எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.!
பனிப்பாறைக்கு கீழே உள்ள குளிரான டெம்பரேச்சரில், திரவமாக நீர்நிலைகள் இருந்தால் தென்துருவம் உண்மையாகவே உப்பானதாக இருக்க வேண்டும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உப்பு நீரில் எந்த நுண்ணுயிரிகளும் வாழ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரமான பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு, இதற்கு முந்தைய காலத்தில், இந்தப் பகுதி உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருந்திருக்கலாம் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் இருப்பதைப்போலவே, செவ்வாய் கிரகத்திலும் பனிப் பாறைகளுக்கு அடியில் நீர்நிலைகள் இருக்கின்றன. ஆனால் பூமியைப் பொறுத்தவரை பனிப் பாறைகளுக்கு கீழே மிகப்பெரிய உறைந்த ஏரிகள், ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் நீர் நிலைகள் ஆகியவை இருக்கின்றன. ஆனால் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தென் துருவத்தில் இருக்கும் இந்த ஐஸ் கேப்ஸ் மிகவும் குளிர்ச்சியான செவ்வாய் கிரக தட்ப வெப்ப நிலையால் சமீபத்தில் உறைந்து போய் இருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
Also Read : பட்ஜெட் விலையில் லேப்டாப்.. 4ஜி கார்டுடன் வரும் ‘ஜியோபுக்’ விலை என்னத் தெரியுமா.?
மிகவும் குளிர்ச்சியான பருவ நிலை காலத்தில், மேற்பகுதியில் பனிக்கட்டியாக உறைந்து இருந்தாலும் அடிப்புறத்தில் நீர் நிலையாக இருக்கும் பொழுது அதற்கு ஜியோதெர்மல் வெப்பம் தேவைப்படும். இதற்கு, தற்போது செவ்வாய் கிரகத்தில் இருப்பதை விட அதிக வெப்பம், தேவைப்படும்.
நான்டெஸ் பல்கலைக்கழகம், டப்ளின் மற்றும் திறந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உட்பட பல்வேறு குழுக்கள், செவ்வாய் கிரகத்தின் ரேடார் சிக்னல் கிடைத்த தென் துருவ பனிப்பாறைகளின் மேற்பரப்பை மார்ஸ் குளோபல் சர்வேயர் என்ற நாசாவின் செயற்கைக்கோளிலிருந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கு பல விதமான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.