ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

காலநிலை மாற்றத்தால் மாறும் ஆர்க்டிக் கடல்... ஒலிகளை சேகரிக்க கடலுக்குள் ஹைட்ரொபோன்கள் -புதிய ஆய்வு

காலநிலை மாற்றத்தால் மாறும் ஆர்க்டிக் கடல்... ஒலிகளை சேகரிக்க கடலுக்குள் ஹைட்ரொபோன்கள் -புதிய ஆய்வு

ஆர்க்ட்டிக் கடல்

ஆர்க்ட்டிக் கடல்

ஹைட்ரோஃபோன்களில் நீங்கள் கேட்பது நேரத்தின் ஸ்னாப்ஷாட். இது ஒரு டைம் கேப்சூல் போன்றது,

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் துறையில் அறிவியலுக்கும் கலைகளுக்கும் இடையிலான முதல் ஒத்துழைப்பில், கிரீன்லாந்திற்கு அப்பால் உள்ள கடல்களில் பனிப்பாறைகள் உருகும் ஒலிகளைக் கேட்க, பதிவுசெய்ய விஞ்ஞானிகள் நீருக்கடியில் ஹைட்ரோஃபோன்களை நிறுவியுள்ளனர்.

புவி வெப்பமடைதல், அதிகரித்து வருவதால் கடல் வெப்பநிலை மற்றும் காலநிலை நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள கடல்களின் ஒலிகளைப் பதிவுசெய்து பாதுகாப்பதே இதன் யோசனை. இந்த ஹைட்ரோஃபோன்கள் நீருக்கடியில் ஒலிகளை பதிவு செய்யும், பின்னர் அவை டியூன் செய்யப்பட்டு ஆடியோவாக மாற்றப்படும். ஹைட்ரோஃபோன்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒலிகளைப் பதிவு செய்யும், பின்னர் அவை ஒலியியலுக்கு மாற்றப்படும்.

இந்த திட்டத்தை ஐரிஷ் கலைஞர் சியோபன் மெக்டொனால்ட் வழிநடத்துகிறார். அவர் காற்று, சுவாசம் மற்றும் வளிமண்டல நிகழ்வுகளில் கவனத்தை ஈர்க்கும் சிறந்த பணிக்காக அறியப்படுகிறார். "ஹைட்ரோஃபோன்களில் நீங்கள் கேட்பது நேரத்தின் ஸ்னாப்ஷாட். இது ஒரு டைம் கேப்சூல் போன்றது," என்று அவர் கூறுகிறார்.

தீபாவளிக்கு மறுநாள் நிகழும் சூரியகிரகணம்... பிர்லா கோளரங்கம் முக்கிய எச்சரிக்கை

அலைகளின் ஓசைகள் மட்டுமின்றி நிலநடுக்கம், நிலச்சரிவுகள், கடல்விலங்குகள், மாசுபாடு மற்றும் உருகும் நீர் போன்றவற்றைப் பதிவுசெய்வதற்காக கடலில் பல்வேறு நிலைகளில் ஹைட்ரோஃபோன்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் துருவ திட்டத்தில் கிரீன்லாந்து மற்றும் கனடா இடையே உள்ள டேவிஸ் ஜலசந்தியில் 12 கப்பல் நங்கூரமிடும் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இவற்றில் ஐந்து இடங்களில் ஹைட்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கால மாற்றத்தால் கடல் மட்டங்கள் உயர்ந்து வருகின்றன, அது பல்லுயிர் பெருக்கத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடல் மற்றும் ஆர்க்டிக் விலங்குகளில் ஒலிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். தொடர்பு, இனப்பெருக்கம், உணவளித்தல் மற்றும் இறுதியில் உயிர்வாழ்வதற்கு செவிப்புலன் அடிப்படையாகும். அதில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து பதிவிடவே இந்த முயற்சி.

வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஐரிஷ் கலைஞர் 2024 ஆம் ஆண்டில் ஹைட்ரோஃபோன்களை மீட்டெடுக்கும் போது ஒரு ஒளியியலாளரோடு இணைந்து ஒலி தொகுப்பை உருவாக்குவார். ஜலசந்தியில் அவர் மேற்கொள்ளும் பயணத்தின் அடிப்படையில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை உருவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள், இன்று உலகம் முழுவதும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்தினாலும், கிரீன்லாந்து பனிக்கட்டி இன்னும் 110 குவாட்ரில்லியன் டன் பனியை இழக்க நேரிடும், இது சராசரியாக உலகளாவிய கடல் மட்டத்தை குறைந்தது 27 சென்டிமீட்டர் உயர வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Climate change, Ice land