உலகின் வளர்ச்சியை படிக்கும் போது அதில் வாழ்ந்து இறந்த விலங்குகள் , தாவரங்கள் பற்றி அறிவது முக்கியம். இந்த பூமியில் முன்னர் ஒரு காலத்தில் மிகப்பெரிய உருவங்களோடு டைனோசர்கள் வாழ்ந்ததாக சான்றுகள் உள்ளது. தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகளாக இருந்த அந்த உயிரினங்கள் இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. அதன் எச்சங்கள் தான் அவ்வப்போது கிடைத்து வருகிறது.
அப்படி ஒரு எச்சம் இன்றைய சீனாவில் அன்ஹுய் மாகாணத்தின் கியான்ஷான் படுகையில் இரண்டு புதைபடிவ முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பீரங்கி குண்டு அளவிலான அந்த இரண்டு டைனோசர் முட்டைகள் கால்சைட் படிகங்களால் நிரப்பப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ஜர்னல் ஆஃப் பேலியோஜியோகிராஃபி(பழைய கால புவியியல்) எனும் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வுக் கட்டுரையில் சீன நிபுணர்களால் இந்த அற்புதமான கண்டுபிடிப்பு பற்றிய விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளது .
ஆன்லைன் கேமிங்கிற்கான புதிய சட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கு அரசாங்கக் குழு பரிந்துரை
இரண்டு கிட்டத்தட்ட நீல்வட்டமான முட்டைகள் டைனோசர்களின் காலத்தின் இறுதிக் காலமான ‘கிரெட்டேசியஸ்’ காலத்தைச் சேர்ந்தவை. அவை மரபுகளால் திரிந்த புதிய வகை டைனோசர் இனத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
முட்டைகளின் பெரிய அளவுகள் மற்றும் முட்டை ஓடு அலகுகளின் இறுக்கமான அமைப்பு மற்றும் அவற்றின் தனித்துவமான கோள வடிவத்தைப் பயன்படுத்தி இதைக் கண்டுபிடித்ததாக பழங்கால புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். இரண்டும் 4.1 முதல் 5.3 அங்குலம் நீளம் மற்றும் 3.8 முதல் 5.2 அங்குலம் அகலம் கொண்டது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, முட்டைகள் Shixingoolithus qianshanensis எனப்படும் புதிய "ஓஸ்பீசிஸை" உயிரியல் பிரிவைச் சேர்ந்தது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட முட்டைகள் ஆர்னிதோபாட் , அதாவது சிறிய, தாவர உண்ணும், இரு கால் டைனோசர்களாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
600 ஆண்டுகளுக்கு முன் வெடித்த நட்சத்திரத்தை வைத்து மற்ற நட்சத்திரங்களின் அழிவை கணிக்க முயலும் நாசா
கியான்ஷான் படுகையில் இருந்து முன்னர் Oogenus Shixingoolithus எனும் உயிரின வகையை கண்டுபிடித்தனர். இப்போது புதிதாக கண்டுபிடித்த oospecies Shixingoolithus qianshanensis உம் முன்னர் கண்டுபிடித்த டைனோசர் இனத்தைப் போலவே அமைப்புக்களைக் கொண்டுள்ளது.
S. qianshanensis, கிழக்கு சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேல் கிரெட்டேசியஸ்-லோயர் பேலியோசீன் பாஸ்டா பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. சீனாவின் மேல் கிரெட்டேசியஸில் உள்ள டைனோசர் முட்டைகள் அபரிமிதமான அளவுகள், ஏராளமான வகைகள் மற்றும் பரவலான இருப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. தோராயமாக 16 oofamilies மற்றும் 35 oogenera சீனாவில் பதிவாகியுள்ளன," என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், வானிலை மாற்றங்களால், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகளில் முட்டை ஓடுகளின் பெரும்பகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய இரண்டாம் நிலை முட்டை ஓடுகள் உடைந்துள்ளதாக நிபுணர்கள் விளக்கினர். அதனால் அதன் உட்புறத்தில் கால்சைட் படிகங்கள் வெளிப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.