Home /News /technology /

விந்து மற்றும் முட்டை இன்றி உருவாக்கப்பட்ட செயற்கை கரு - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு

விந்து மற்றும் முட்டை இன்றி உருவாக்கப்பட்ட செயற்கை கரு - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு

செயற்கை கரு

செயற்கை கரு

முட்டை அல்லது விந்தணுவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பேராசிரியர் மக்டலேனா ஜெர்னிக்கா-கோட்ஸ் தலைமையிலான குழு, ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி கரு மாதிரியை உருவாக்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
கரு என்பது உயிரினத்தின் விந்து மற்றும் முட்டை இணைந்து உருவாகும். இது தான் புதிய ஒரு உயிரின் மூலம். இதன் செல்கள் பிரிந்து முழு உடல் உருவாகும் என்று தான் காலம் காலமாக உயிரியல் பாடத்தில் படித்திருப்போம்.

ஆனால் விந்தோ முட்டையோ இல்லாமல் ஒரு உயிரினத்தை உருவாக்கியுள்ளனர் என்றால் நம்புவீர்களா? இது ஏதோ கண்கட்டு வித்தையோ, கட்டுக் கதையோ இல்லை.ஆய்வகத்தில் சோதனையின் முடிவுகள்.

செயற்கை கரு:

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மூளை, துடிக்கும் இதயம் மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக் கட்டுமான செல் தொகுதிகளைக் கொண்ட உலகின் முதல் "செயற்கை" கருவை உருவாக்கியுள்ளனர் என்று நியூயார்க் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளது .

ஒரு எலியின் உடலில் உள்ள ஸ்டெம் செல்களில் இருந்து இந்த கரு உருவாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் வெளியீட்டின்படி , முட்டை அல்லது விந்தணுவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பேராசிரியர் மக்டலேனா ஜெர்னிக்கா-கோட்ஸ் தலைமையிலான குழு, ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி கரு மாதிரியை உருவாக்கியது.

ஸ்டெம் செல்:
உயிரினங்களின் உடலின் ஸ்டெம் செல்கள் என்ற தனித்துவமான செல்கள் இருக்கும். இந்த தனித்துவமான செல்களின் சிறப்பு என்னவென்றால் உடலில் உள்ள கிட்டத்தட்ட எல்லா வகை உயிரணுக்களாகவும் இந்த செல்கள் மாறும் தன்மை கொண்ட சிறப்பு செல்கள் ஆகும்.

ஜெர்னிக்கா-கோட்ஸ் கேம்பிரிட்ஜின் உடலியல், வளர்ச்சி மற்றும் நரம்பியல் துறையில் பாலூட்டிகளின் வளர்ச்சி மற்றும் ஸ்டெம் செல் உயிரியலில் பேராசிரியராக உள்ளார்.

பாலூட்டிகளின் அடிப்படை வளர்ச்சியில் இருக்கும் மூன்று வெவ்வேறு ஸ்டெம் செல் வகைகள் உள்ளது. அவற்றை ஆய்வகத்தில் இயற்கையான செயல்முறைகளைப் பின்பற்றி, மற்ற செல்களாக மாறத் தொடங்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டன.

ஒரு குறிப்பிட்ட மரபணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம், செல்களுக்குள்ளான தொடர்புகளுக்கு ஒரு சிறப்பு சூழலை உருவாக்கியது. இதனால் அந்த செல்கள் வேறு செல்களாக பரிணமித்து வளர்ச்சி அடைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கள் எலி செல்லில் இருந்து உருவான கரு மாதிரியானது மூளையை மட்டுமல்ல,  இதயத்தையும் உருவாக்கி இருக்கிறது. உடலை உருவாக்கும் அனைத்து கூறுகளையும் உருவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர் மேற்கோள் காட்டியுள்ளார்.

இது எங்கள் ஆய்வு சமூகத்தின் பல ஆண்டுக் கனவு இப்போது இவ்வளவு தூரம் வந்துள்ளதை எண்ணி பெருமை கொள்கிறோம். மேலும் ஒரு தசாப்த காலமாக பணியின் முக்கிய வெற்றியை இப்போது அடைந்துள்ளோம்  என்று கூறினார்.

சில கர்ப்பங்கள் ஏன் தோல்வியடைகின்றன, மற்றவை வெற்றி பெறுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜெர்னிக்கா-கோட்ஸின் குழு கடந்த பத்தாண்டுகளில் கர்ப்பத்தின் முதல் கட்டங்களை ஆராய்ச்சி செய்து வருகிறது. கருவின் வளர்ச்சியை இயக்குவதற்காக, எக்ஸ்ட்ரா எம்பிரியோனிக் செல்கள் கரு உயிரணுக்களுடன் வேதியியல் ரீதியாக மட்டுமல்லாமல் இயந்திர ரீதியாகவும் அல்லது தொடுதல் மூலமாகவும் தொடர்புகொள்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Research, Science

அடுத்த செய்தி