Home /News /technology /

ஸ்மைல் ப்ளீஸ்.. மனிதர்களை போல் சிரித்து பேசும் எரிகா ரோபோ..!

ஸ்மைல் ப்ளீஸ்.. மனிதர்களை போல் சிரித்து பேசும் எரிகா ரோபோ..!

எரிகா ரோபோ

எரிகா ரோபோ

எப்போது சிரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அல்காரிதத்தைப் பயிற்றுவிக்கவும், சூழ்நிலையைப் பொறுத்து சிறந்த சிரிப்பைத் தேர்வு செய்யவும் ஆய்வு தரவுகள் பயன்படுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களை மனிதர்களைப் போலவே வடிவமைத்து, வேலை செய்ய வைக்கும் ஆராய்ச்சிகள் தான் உலகத்தில் சூடு பிடிக்கும் தொழிலாக இருந்து வருகிறது. ஹுமனாயிட் ரோபோக்கள் எனப்படும் ரோபோக்கள் மனிதர்களை போல தோற்றம் கொள்வது மட்டும் இல்லாமல் மனிதர்களை போலவே யோசிக்கவும், பேசவும், செயல்படவும் வடிவமைக்கப்படுகிறது.

மனிதர்களை போலவே பேசும் சோபியா ரோபோ இருப்பது போல்  சிரிக்கும் ரோபோவை ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளனர், இது சூழலுக்கு ஏற்ப மாறுபட்ட  சிரிப்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிரிக்கும் ரோபோ எரிகா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோவால் மனிதர்களின் சொல்லாத உணர்ச்சிகளைக் கூட பின்பற்ற முடியும்.

சிரிப்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஆனால் சிக்கலான மனித உணர்வு ஆகும். நகைச்சுவை உணர்வு நபருக்கு நபர் வேறுபடும். சிரிப்பின் வகை மற்றும் அளவு கூட மாறுபடும்.

பீரங்கி குண்டு அளவிலான டைனோசர் முட்டைகள்..! - சீனாவில் கண்டுபிடிப்பு

பேசும் ரோபோக்கள் மனித பயனர்களுடன் இயற்கையான தொடர்புகளை அடைய பச்சாதாபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் ஃபிரான்டியர்ஸ் இன் ரோபாட்டிக்ஸ் மற்றும் AI ஸ்போக்கன் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது. இருப்பினும், சிரிப்புக்கு அதிக அளவிலான உரையாடல் புரிதல் தேவை என்பதை வலியுறுத்துகிறது. பேசும் ரோபோக்களில் சிரிப்பைச் செயல்படுத்துவது என்பது அதனாலேயே சவாலானதாக இருக்கிறது.

2015 இல் ஜப்பானில் ஆண்ட்ராய்டு அடிப்படையில் இயங்கும் எரிகா ரோபோவை  முதலில்  உருவாக்கினார். அதன் பின்னர் மற்ற ரோபோக்களை போல் மனிதனை போல அலுவலக வேலை செய்யும் ரோபோவாக இல்லாமல் சமூக பண்பு கொண்ட ரோபோவாக இதை மேம்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஜப்பானிய ஆய்வாளர்கள் இந்த ரோபோவின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த உரையாடல் இடையான சிரிப்பு குறித்த உள்ளீடுகள், மற்றும் சோதனைகளை செய்து வருகின்றனர். மனிதர்களோடு அவர்களைப்போலவே சிரித்து மகிழ்ந்து பேசும் ரோபோவாக இதை மாற்றி வருகின்றனர்.இந்த ரோபோ, தோற்றத்தில் மட்டுமல்ல, மனித நடத்தையையும் பின்பற்றுகிறது. அவர்களின் ஆய்வில், இந்த அழகான பெண் ரோபோவிற்கும் ஆண் தன்னார்வலர்களுக்கும்  இடையே 80 க்கும் மேற்பட்ட டேட்டிங் உரையாடல்களிலிருந்து பயிற்சித் தரவை சேகரித்தனர். இது ஆரம்பத்தில் நான்கு பெண் கலைஞர்களால் இயக்கப்பட்டது.

உரையாடல் தரவுகள் தனி சிரிப்பு, சமூக சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியான சிரிப்பு என்று பெயரிடப்பட்டு சோதித்து வருகிறது. எப்போது சிரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அல்காரிதத்தைப் பயிற்றுவிக்கவும், சூழ்நிலையைப் பொறுத்து சிறந்த சிரிப்பைத் தேர்வு செய்யவும் இந்தத் தரவு பயன்படுத்தப்படுகிறது.

ஆன்லைன் கேமிங்கிற்கான புதிய சட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கு அரசாங்கக் குழு பரிந்துரை

சிரிப்பு, கண் பார்வை, சைகைகள் மற்றும் பேசும் பாணி போன்ற உரையாடல் நடத்தைகள் மூலம் இதைக் காட்ட முடியும் என்று அதன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வு ரோபோக்களுக்கு மனிதநேயத்தை சேர்க்கும் ஒரு முக்கிய படியாக இருக்கும்.

சிரிப்பு என்பது மொழியியல் அல்லாத நடத்தை என்றாலும், அது உரையாடல் மற்றும் கலாச்சாரத்தின் சூழலையும் சார்ந்துள்ளது. எனவே ஒரு நண்பருடன் பேசுவது போல் ஒரு ரோபோவுடன் இயல்பாக அரட்டையடிக்க 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Technology

அடுத்த செய்தி