• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • YouTuber | செடியைத் தூங்க வைக்கும் அறிவியல் யூடியூபர்: செடிகளுடன் தகவல்தொடர்பு ஏற்படுத்திய வைரல் வீடியோ!

YouTuber | செடியைத் தூங்க வைக்கும் அறிவியல் யூடியூபர்: செடிகளுடன் தகவல்தொடர்பு ஏற்படுத்திய வைரல் வீடியோ!

செடிக்கு பாசிட்டிவ் மின்முனையையும், அது நடப்பட்ட இடத்திலுள்ள மண்ணில் நெகட்டிவ் மின்முனையையும் ஜேம்ஸ் இணைத்தார்.

  • Share this:
தாவரங்களுடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும், அதற்கான செயல் திறன்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், தாவரத்தை எப்படிக் கட்டுப்படுத்துகிறார் என்பதையும் ஐந்து நிமிட வீடியோவில் ஜேம்ஸ் காட்டியுள்ளார்.

அறிவியல் உதவியோடு, மனிதர்கள் செடிகளின் இயக்கத்தை மென்மையாக கட்டுப்படுத்த முடியும் என்பதை ஒரு யூடியூபர் செய்து காட்டியுள்ளார். கெமிக்கல் இன்ஜினியரிங்கில் முனைவர் பட்டம் பெற்ற, ஆர் & டி இல் பொறியாளராக பணியாற்றும் ஜேம்ஸ், தி ஆக்ஷன் லாப் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், சமீபத்தில், செடிகளுடன் எவ்வாறு தகவல் தொடர்பு கொள்வது என்பது பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த ஐந்து நிமிட வீடியோவில், தாவரங்களுடன் தொடர்புகொள்வதற்கான செயல் திறன்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும், தன் கைகளில் இணைப்புகள் மூலம், செடிகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதையும் ஜேம்ஸ் காட்டுகிறார்.

எதையும் கட்டுப்படுத்தும் அடிப்படையில், மின்சாரம் உள்ளது என்பதை ஜேம்ஸ் தனது வீடியோவின் தொடக்கத்தில் கூறியுள்ளார். மின்சாரத் தேவை ரோபோட்கள் இயக்கத்துக்கு மட்டுமானதல்ல. மனிதர்களும், மற்ற உயிரினங்களும், தங்களின் இயக்கத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மோட்டார்களில் மின்சாரம் பாய்வதைக் கட்டுப்படுத்த ரோபோக்கள் வயர்களைப் பயன்படுத்துவதைப் போலவே, மனித உடலும் நரம்புகளைப் பயன்படுத்தி தசைகளுக்கு மின்சாரம் பாய்வதைக் கட்டுப்படுத்துகிறது.

ஒரு மின்சார சமிக்ஞை, ஒளியின் வேகத்தில் கம்பி வழியாக இயங்கக்கூடிய ஒரு மின்காந்த அலையைத் தூண்டுகிறது. இந்நிலையில், அது உயிரணுக்களில் உள்ள இயற்கை அயனி இயக்கங்களைச் சார்ந்து இருப்பதால், ஒரு மனித உடலின் வழியாக மின்காந்த அலை இயங்கும் வேகம் ஒப்பீட்டளவில் மெதுவாக இருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, சில தாவரங்களும் இந்த செயல்முறையை அவற்றின் இயக்கத்திற்கு பயன்படுத்துகின்றன என்று ஜேம்ஸ் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

வீனஸ் ஃப்ளைட்ராப் எனப்படும் வீனஸ் பூச்சி கொல்லி தாவரத்தை, ஜேம்ஸ் ஒரு எடுத்துக்காட்டாக காட்டினார். செடிக்கு பாசிட்டிவ் மின்முனையையும், அது நடப்பட்ட இடத்திலுள்ள மண்ணில் நெகட்டிவ் மின்முனையையும் இணைத்தார். பின்னர், இவற்றுக்கு இடையே மின்சாரம் எப்படி பாய்கிறது என்பதை கணக்கிடும் ஒரு திரையைக் காண்பித்தார். அந்த கிராஃப், கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டில், குறைந்தபட்ச செயல்பாட்டைக் காட்டுகிறது.

ஆனால் ஜேம்ஸ் டிராப்பில் உள்ள கற்றைகளில் ஒன்றைத் தொடும்போது, மின்சார சமிக்ஞையில் திடீரென ஸ்பைக் ஏற்படுகிறது. இது, செடி ஆற்றல் மிக்க செயல் திறனைப் பயன்படுத்துகிறது என்பதை நிரூபிக்கிறது. சென்சிடிவ் மிமோசா என்ற செடியில், ஜேம்ஸ் மற்றொரு பரிசோதனையை நடத்தினார். அந்த சோதனையில், அதைத் தொட்டவுடன், தொட்டாச்சிணுங்கி செடி போல மூடிக்கொள்கிறது.

இந்த இரண்டு செடிகளையும், ஒரு கம்பி மூலம் இணைத்து, வீனஸ் பூச்சி கொல்லி செடியில் ஏற்படும் விளைவுகளையும், ஆற்றல் செயல்திறனில் எவ்வளவு வோல்டேஜ் உருவாகிறது என்பதையும், அந்த ஆற்றலை, சென்சிடிவ் மிமோசா செடிக்கு அனுப்பி, அதனை தூங்க வைக்க முடிவு செய்தார். இந்த சோதனையின் போது, மிமோசா இலைகள் எவ்வளவு உணர்வு பூர்வமாக இருந்தது என்பதை ஜேம்ஸ் காட்டினார். வீனஸ் பூச்சி கொல்லி செடியை அதன் இழையைத் தொட்டு, தூண்டியவுடன், இலைகளை மூடிக்கொண்டன என்பதை பார்வையாளர்கள் கண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜேம்ஸ் செய்தது என்ன? ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு சிக்னல் அனுப்பி, அந்த இரண்டு செடிகளுக்கும் இடையில் தகவல் தொடர்பை ஏற்படுத்தினார். இந்த முறையைப் பயன்படுத்தி, ஜேம்ஸ் தன்னுடைய கரத்தில் ஒரு எலக்ட்ரோடை இணைத்து, சென்சிடிவ் மிமோசா செடிக்கு சிக்னல் அனுப்பினார். அவர் தன்னுடைய கையை அசைத்தவுடன், அந்த செயல் வழியே உருவாக்கப்பட்ட ஆற்றல் செயல்திறன், செடிக்கு பரிமாற்றம் ஆகி, அதனை தூங்க வைத்தது.

இந்த வீடியோவை ஜேம்ஸ் சென்ற மாதம் யூடியூபில் பதிவேற்றினார். இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இதனை பார்த்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: