டிக்-டோக் மீதான தடை குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமலேயே செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக டிக் டோக் நிறுவனத்தின் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

Web Desk | news18
Updated: April 22, 2019, 1:35 PM IST
டிக்-டோக் மீதான தடை குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
டிக் டாக்
Web Desk | news18
Updated: April 22, 2019, 1:35 PM IST
டிக்-டோக் மீதான தடை குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்காவிட்டால் தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்யவும் அதன் வீடியோக்களை ஊடகங்களில் ஒளிப்பரப்பவும் மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.

மேலும் டிக் டோக் வீடியோ செயலிக்கு தடை விதிப்பது குறித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய செயலாளர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


அதன் அடிப்படையில் மத்திய அரசும் கூகுள் நிறுவனுத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி டிக் டோக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து டிக் டோக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமலேயே டிக் டோக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

Loading...

மேலும், மத்திய அரசின் தடையால், நாள் ஒன்றுக்கு நான்கரை கோடி ரூபாய் அளவுக்கு தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக டிக் டாக் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள் டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 24-ம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். உயர்நீதிமன்றம் தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும் தெரிவித்தனர்.

Also see...First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...