இணையதள வீடியோக்களை ஒழுங்குபடுத்த விதிகள் வேண்டும்: உச்சநீதிமன்றம்

மாதிரிப் படம்

  • Last Updated :
  • Share this:
Netflix மற்றும் Amazon prime போன்ற இணைய தளங்களில் வெளியிடப்படும் வீடியோக்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வரையறுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இணையதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்களுக்கான விதிமுறைகள் ஏதும் இல்லாமல் இருக்கின்றன. எனவே எந்த கட்டுப்பாடும் இல்லாததால் பாலியல் உணர்வுகள், வன்முறைகள் போன்றவற்றை தூண்டும் விதமான வீடியோக்கள் அதிக அளவில் பதிவேற்றப்படுகின்றன.

இது தொலைதொடர்புத் துறை சட்டத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டிய தொண்டு நிறுவனம் ஒன்று இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.

Published by:Yuvaraj V
First published: